Header Logo

வணிகம்
பேரார்வம், மக்கள், மற்றும் விளையாட்டு ஆகியவற்றின் சங்கமம்: Sri Lanka Padel League 2026 போட்டியின் எழுச்சிக்கு ஹட்ச் நிறுவனத்தின் ஆதரவு

May 11, 2026 - 01:14 PM -

0

பேரார்வம், மக்கள், மற்றும் விளையாட்டு ஆகியவற்றின் சங்கமம்: Sri Lanka Padel League 2026 போட்டியின் எழுச்சிக்கு ஹட்ச் நிறுவனத்தின் ஆதரவு

விளையாட்டு என்பது களத்தில் வெற்றிவாகை சூடுவது என்பதற்கும் அப்பாற்பட்டது என்ற போக்கு உலகில் தற்போது அதிகரித்து வருகின்றது. இது வாழ்வியல், சமூகம், மற்றும் டிஜிட்டல் ரீதியான அனுபவங்கள் ஆகியவற்றுடன் பின்னிப்பிணைந்துள்ளது. அந்த வகையில் பிரபலமடைந்து வருகின்ற ஒரு விளையாட்டுடன் பிணைப்பு, ஆற்றல், மற்றும் பகிரப்பட்ட பேரரார்வத்திற்கு சக்தியளிக்கும் வகையில் Sri Lanka Padel League (SLPL) 2026 போட்டிக்கு ஆதரவளிப்பதற்கு ஹட்ச் நிறுவனம் முன்வந்துள்ளது. 

அண்மையில் இடம்பெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இது குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கையில் padel விளையாட்டில் வியப்பூட்டும் அத்தியாயம் ஒன்றின் தொடக்கத்தை இது குறித்து நிற்கின்றது. 2026 ஜுன் 19 முதல் 21 வரை கொழும்பில் CR & FC மைதானத்தில் ‘Padel House’ ல் முதல்முறையாக இடம்பெறவுள்ள இச்சுற்றுப்போட்டியில் பல்வேறு கழகங்கள் விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, போட்டியிடவுள்ளன. உலகில் தற்போது நகரங்களில் அதீத ஆர்வத்துடன், வெகுவேகமாக பிரபலமடைந்து வருகின்ற இந்த விளையாட்டின் மீதான ஆர்வம் இலங்கையிலும் பெருமளவில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

சுறுசுறுப்பு, வியூகம், மற்றும் பிணைப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட padel விளையாட்டின் தனித்துவமான பண்புகளை ஹட்ச் நிறுவனத்தின் பண்புகளும் எதிரொலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. Global Fortune 500 பெரும் நிறுவனங்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள CK Hutchison Holdings குழுமத்தின் அங்கமாகத் திகழும் ஹட்ச் நிறுவனம், தொழில்நுட்பம் மற்றும் யதார்த்த உலகின் பிணைப்புக்களுடன் மகத்தான வாடிக்கையாளர் அனுபவங்களை வழங்குவதற்கு எப்போதும் முன்னுரிமையளித்துள்ளது. வெகுவேகமாக வளர்ந்து வரும் அறிவாற்றல் தொடர்பு மற்றும் வலுவான ஈடுபாடு ஆகியவற்றுடன் செழித்து வருகின்ற ஒரு விளையாட்டுடன் மக்கள், அபிலாஷைகள், மற்றும் தொழில்நுட்பத்தைப் பிணைக்கின்ற ஒரு கூட்டாண்மையை இதன் மூலமாக ஹட்ச் ஏற்படுத்தியுள்ளது. 

தற்காலத்தில் விளையாட்டின் மூலமான அனுபவம் உடல்ரீதியாக விளையாடும் போட்டி என்ற ஸ்தானத்திற்கும் அப்பாற்பட்டதாக மாறியுள்ளது. நிகழ்நேரத்தில் நேரலையாக அனுபவிப்பதிலும், போட்டி தொடர்பான விபரங்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுதல், போட்டிக்கான பதிவுகளை தங்குதடையின்றி மேற்கொள்ளுதல், போட்டி இடம்பெறும் களத்தில் டிஜிட்டல்ரீதியாக ஈடுபாட்டுத் தொடர்புகளை முன்னெடுத்தல், மற்றும் போட்டிகளை உடனடியாக பகிருதல் ஆகியவற்றுக்கு இடமளிப்பதில் பாரியதொரு திருப்புமுனையாக தொழில்நுட்பம் மாறியுள்ளது. விளையாட்டு வீரர்கள், இரசிகர்கள் ஆகிய தரப்பினரின் அனுபவத்தை மேம்படுத்தி மற்றும் இச்சுற்றுப்போட்டி ஒட்டுமொத்தமாக வெற்றிகரமாக இடம்பெறுவதற்கு இணைப்பு மற்றும் டிஜிட்டல் கட்டமைப்புக்கு ஆதரவளிக்கும் பக்கபலமாக மிகவும் வலிமைமிக்க தனது HUTCH ENTERPRISE ஆதரவை ஹட்ச் இதற்கு வழங்குகின்றது. 

ஹட்ச் நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி ஹம்தி ஹசன் அவர்கள் இந்த ஒத்துழைப்பு குறித்து கருத்து தெரிவிக்கையில், “பகிரப்பட்டுள்ள பேரார்வங்கள் மற்றும் அர்த்தம் நிறைந்த அனுபவங்கள் மூலமாக மக்களுடன் இணைப்பை ஏற்படுத்துவதில் ஹட்ச் நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த விளையாட்டு மக்கள் மத்தியில் பிரபலமடைவதை இன்னும் விரிவுபடுத்தி, அதன் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்பரீதியான ஆற்றலை வழங்கி இச்சுற்றுப்போட்டிக்கு ஆதரவளிக்க இந்த ஒத்துழைப்பு எமக்கு இடமளிக்கின்றது. சுறுசுறுப்பான சமூகங்களுடன் ஈடுபாடுகளை வளர்த்து, இலங்கையில் பிரபலமடைந்து வருகின்ற விளையாட்டுக்களை வளர்ப்பதற்குப் பங்களிப்பதில் எமது அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கின்றது.” 

விளையாட்டு, வாழ்வியல், மற்றும் டிஜிட்டல் சூழல் கட்டமைப்பு ஆகியவற்றுக்கிடையிலான இடைவெளி தொடர்ந்தும் அருகி வருகின்ற நிலையில், ஹட்ச் நிறுவனத்தின் நிலைப்பாட்டில் மூலோபாயரீதியான மாற்றம் ஏற்பட்டு வருவதை இந்த ஒத்துழைப்பு பிரதிபலிக்கின்றது. கடந்த ஆண்டில் இடம்பெற்ற அங்குரார்ப்பண Ceylon Golf League போட்டியுடனும் ஹட்ச் நிறுவனம் கூட்டுச் சேர்ந்தமை குறிப்பிடத்தக்கது. பாரம்பரியமாக இணைப்புச் சேவைகளை வழங்கும் நிறுவனம் என்ற நிலையிலிருந்து வளர்ச்சி கண்டு, மேம்பாடு, புதிய அனுபவங்கள், மற்றும் வலுவான சமூகங்கள் ஆகியவற்றுக்கான வழிகாட்டியாக மாற வேண்டும் என்ற தனது குறிக்கோளை சமீபத்தைய இந்த ஈடுபாட்டின் மூலமாக ஹட்ச் நிறுவனம் சிறப்பாகப் பிரதிபலிக்கச் செய்துள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

title