Header Logo
Mogo Academy

இந்தியா
மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!

May 11, 2026 - 03:48 PM -

0

மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
Mobitel inner

தமிழக முதல்வராக பொறுப்பேற்று நேற்று (10) கொண்ட விஜய், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு மரியாதை நிமித்தமாக நேரில் வந்த முதல்வர் விஜய் அவரிடம் வாழ்த்து பெற்றார். 

முன்னதாக தங்களது வீட்டிற்கு வந்த முதல்வர் விஜய்யை, வாசலுக்கு வந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்முகத்துடன் கட்டியணைத்து வரவேற்றார். இதனை தொடர்ந்து வீட்டிற்குள் வந்த முதல்வர் விஜய்யை, ஸ்டாலினும் வீட்டிற்குள் வருமாறு வரவேற்று ஆரத்தழுவி அழைத்து சென்றார். 

இதனையடுத்து வீட்டிற்குள் சென்ற முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மலர்செண்டு கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் விஜய்க்கு பொன்னாடை அணிவித்து பரஸ்பரம் மரியாதை அளித்தார். 

சென்னை, ஆழ்வார்பேட்டை மு.க.ஸ்டாலின் இல்லம் சென்ற முதலமைச்சர் விஜய்க்கு “காலத்தின் நிறம் 'கருப்பு சிவப்பு' - திமுக 75" என்ற நூலை பரிசாக வழங்கி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

 


MOST READ

காணொளி
அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

Mobitel Upahara