Header Logo

வணிகம்
திறமையை ஊக்குவித்தல், புத்தாக்கத்திற்கு வலுவூட்டல் மற்றும் கலாசாரத்தை மேம்படுத்தல்

May 12, 2026 - 01:10 PM -

0

திறமையை ஊக்குவித்தல், புத்தாக்கத்திற்கு வலுவூட்டல் மற்றும் கலாசாரத்தை மேம்படுத்தல்

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்னுட்ப தீர்வுகள் வழங்குனரான SLT‑MOBITEL இன் திறமை விருத்தியை ஊக்குவித்தல், புத்தாக்கத்தை வளர்த்தல் மற்றும் உயர்-வினைத்திறன் வாய்ந்த கலாசாரத்தை கட்டியெழுப்பல் போன்ற முயற்சிகளை கௌரவிக்கும் வகையில் AICPA & CIMA இன் இலங்கையின் சிறந்த 20 தொழில் வழங்குனர்கள் வரிசையில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளது. 

AICPA & CIMA, அண்மையில் சினமன் லைப் (Cinnamon Life) ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த விசேட விழாவொன்றில் இந்த பட்டியலை வெளியிட்டது. இந்நிகழ்வில் CIMA இன் தலைவரும், சர்வதேச அங்கீகாரம் பெற்ற தொழில்முறை கணக்காளர்களுக்கான சம்மேளனத்தின் (AICPA) இணைத் தலைவருமான ஜோன் கிரஹாம் (John Graham, FCMA (UK), CGMA) பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். மேலும், இந்நிகழ்வில் CIMA, SLT-MOBITEL மற்றும் Nebula Institute of Technology ஆகியவற்றைச் சார்ந்த இலங்கையின் முகாமைத்துவக் கணக்காளர் சமூகத்தின் முக்கிய பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர். 

குழுமத்தின் 7,000 இற்கும் மேற்பட்ட ஊழியர்களின் வளர்ச்சி, நலன்புரி மற்றும் அவர்களின் வலுவூட்டலுக்காக நிறுவனம் கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக இந்த கௌரவிப்பு அமைந்துள்ளது. ஒரு பாரம்பரிய தொலைத்தொடர்பு நிறுவனம் என்பதிலிருந்து அடுத்த தலைமுறை தொழில்நுட்ப நிறுவனமாக உருவெடுக்கும் தனது மாற்றத்திற்கு அமைவாக, ஊழியர்களின் கற்றல், மறுதிறன் மேம்பாடு மற்றும் சுறுசுறுப்பான பணித்திறன் ஆகியவற்றில் குழுமம் தொடர்ச்சியாக முதலீடு செய்கின்றது. தொழில்நுட்ப மற்றும் வணிக ரீதியான மாற்றங்களுக்கு ஏற்ப ஊழியர்கள் தம்மை விரைவாக மாற்றிக்கொள்ளவும், சிறந்த வாடிக்கையாளர் மற்றும் உள்ளக அனுபவங்களை வழங்கவும் இந்த முயற்சி அவர்களை வலுப்படுத்துகின்றது. ‘எமது மக்களே எமது வாடிக்கையாளர்களின் பலம்’ எனும் மனிதவளத் தத்துவத்தின் வழிகாட்டலில், தனது டிஜிட்டல் மாற்றத்தின் மையப்புள்ளியாக ஊழியர்களை இக்குழுமம் முன்னிலைப்படுத்துகின்றது. இதன் கீழ், ஊழியர்களுக்கு AI, Cloud Computing மற்றும் 5G போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 

‘Smart Technician’, ‘Smart Technical Officer’ மற்றும் ‘Smart Sales Officer’ போன்ற முதன்மைத் திட்டங்கள் ஊடாக, தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகிய இரு துறைகளிலும் ஒருமித்து மிளிரக்கூடிய குழுக்கள் உருவாக்கப்படுகின்றன. 

SLT-MOBITEL இன் கல்விச் சேவைகளை வழங்கும் பிரிவான, The Nebula Institute of Technology இனால் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பட்டம் மற்றும் டிப்ளோமா கற்கைள் Hertfordshire பல்கலைக்கழகம் மற்றும் Pearson UK ஆகியவற்றுடன் இணைந்து வழங்கப்படுகின்றன. 2025 இல் மாத்திரம், 25000க்கும் அதிகமான உள்ளக பயிலுனர்கள் மற்றும் 1000 க்கும் அதிகமாக வெளியக மாணவர்கள் தமது அறிவை robotics, data science மற்றும் fibre தொழில்னுட்பங்கள் ஆகியவற்றில் மேம்படுத்தியிருந்தனர். 

நிறுவனக் கட்டமைப்பு மற்றும் பணியாளர் மேம்படுத்தல், மனிதவள டிஜிட்டல் மாற்றம் (HR Digital Transformation), திறமை விருத்தி, ஆற்றல் விரிவாக்கம் மற்றும் ஊழியர் ஈடுபாடு ஆகியன SLT-MOBITEL இன் மனிதவள மூலோபாயத்தின் பிரதான தூண்களாகத் தொடர்ந்து விளங்குகின்றன. மேலும், Robotic Process Automation (RPA), AI மற்றும் முக்கிய செயல்முறைகளில் தன்னியக்கமாக்கல் ஆகியவற்றின் ஊடாக குழுமம் தனது மனிதவள மாற்றத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. அத்துடன், ஊழியர் அனுபவங்களை மேம்படுத்துவதற்காக Neylie ஊழியர் app மற்றும் AI மூலம் இயங்கும் “Ask HR” தளம் ஆகியனவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சிறந்த செயல்திறன் முகாமைத்துவ நடைமுறைகள், மாதாந்த வெற்றியாளர்கள் மற்றும் வருடாந்த சிறந்த விருதுகள் போன்ற ஊழியர் அங்கீகாரத் திட்டங்கள் ஆகியவற்றின் ஊடாக SLT-MOBITEL நிறுவனத்திற்குள் உயர் செயற்திறன் கொண்ட கலாசாரத்தை நிலைநிறுத்துவதில் தொடர்ச்சியான கவனம் செலுத்தப்படுகின்றது. அத்துடன், வெளிப்படையான தொடர்பாடல் மற்றும் ஆக்கபூர்வமான தொழிற்சங்க உறவுகள் மூலம் பலப்படுத்தப்படும் ஈடுபாட்டு முயற்சிகள், ஒன்றிணைந்த ஒத்துழைப்பையும் தடையற்ற பெறுமதிமிக்க சேவையையும் வழங்க வழிவகுக்கின்றன. 

பன்முகத்தன்மை, சமத்துவம், உள்ளடக்கம் மற்றும் உரித்துடைமை ஆகியவற்றுக்கு குழுமம் தன்னை அர்ப்பணித்துள்ளது. உள்ளடக்கமான ஆட்சேர்ப்பு செயன்முறைகள், நெகிழ்ச்சியான பணி மாதிர்கள் மற்றும் ஊழியர் வள குழுக்கள் போன்றவற்றினூடாக ஒவ்வொரு தனிநபரும் பெறுமதியானவராக கருதப்படுவதை உறுதி செய்கிறது. பல்கலைக்கழக பங்காண்மைகள் மற்றும் ஊழியர் நன்மதிப்பு போன்றவற்றினூடாக, இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்னுட்ப பிரிவில் நன்மதிப்பைப் பெற்ற தொழில் வழங்குனர் எனும் கீர்த்தி நாமத்தை SLT‑MOBITEL தொடர்ந்தும் கட்டியெழுப்பிய வண்ணமுள்ளது. 

இந்த நடவடிக்கைகளினூடாக, சிறந்த தொழில் வழங்குனர் எனும் தனது கௌரவிப்பை SLT‑MOBITEL மீள உறுதி செய்துள்ளதுடன், தனது ஊழியர்கள் மற்றும் இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலம் போன்றவற்றில் அசல் முதலீடுகளை வெளிப்படுத்துகிறது.

Comments
0

MOST READ

காணொளி
மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

title