Nov 22, 2026 - 11:12 PM

திருகோணமலை, மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் இன்றிரவு பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் இந்த மூன்று நபர்களும் மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளானவர்கள் தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் காயமடைந்த நபர் தற்போது சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
































