May 16, 2026 - 03:54 PM
By மட்டக்களப்பு நிருபர் சரவணன்
By மட்டக்களப்பு நிருபர் சரவணன்
மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் 17 ஆவது நினைவேந்தலையிட்டு தமிழரசு கட்சியின் மண்முனை வடக்கு பிரதேச கிளையின் ஏற்பாட்டில் பிள்ளையாரடியில் உள்ள புரவி பிள்ளையார் ஆலயத்தின் முன்றலில் இன்று (16) காலை 8.30 மணியளவில் உயிர் நீத்தவர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தி கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியில் அமைந்துள்ள புரவி பிள்ளையார் ஆலய முன்றலில், யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கான அகவணக்கம் செலுத்தப்பட்டு, நினைவஞ்சலிச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்த நினைவேந்தலில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத், மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் டினேஷ், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள், இளைஞர் அணி தலைவர். மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கஞ்சி வழங்கினர்.

































