May 17, 2026 - 02:29 PM -
0
தென்னந்தோட்டம் ஒன்றில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்குள் சிறுத்தை தோல், சில துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களைத் தங்களது வசம் வைத்திருந்த இரண்டு நபர்கள் வனவிலங்கு திணைக்களத்தின் வனாத்தவில்லுவ உப அலுவலக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (17) அதிகாலை வனாத்தவில்லுவ - காட்டுபுளியங்குளம் பகுதியில் வைத்தே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து சிறுத்தை தோல் ஒன்று, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட அனுமதிப்பத்திரமற்ற 12 போர்ட் ரக துப்பாக்கி ஒன்று, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அனுமதிப்பத்திரமற்ற 12 போர்ட் ரக துப்பாக்கி ஒன்று, 05 உயிருள்ள தோட்டாக்கள் மற்றும் 04 வெற்றுத் தோட்டாக் கூடுகள் ஆகியவற்றை வனவிலங்கு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
