May 13, 2026 - 07:11 AM -
0
மேல், சப்ரகமுவ, வடமேல், வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, காலி, மாத்தறை மாவட்டங்களுக்குப் பலத்த மழை குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ளது.
அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மிக பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு அருகாமையில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த அறிவித்தல் இன்று (13) காலை 6.30 மணிக்கு வெளியிடப்பட்டதுடன், இது இன்று மாலை 3.30 மணி வரை செல்லுபடியாகும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சபரகமுவ, வடமேல், வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, காலி, மாத்தறை மாவட்டங்களுக்குப் பலத்த மழை குறித்த எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
அதன்படி, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிக பலத்த மழை பெய்யக்கூடும்.
இலங்கைக்கு அருகாமையில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீட்டர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த அறிவித்தல் இன்று (13) காலை 6.30 மணிக்கு வெளியிடப்பட்டதுடன், இது இன்று மாலை 3.30 மணி வரை செல்லுபடியாகும்.
