Header Logo

செய்திகள்
சிலை மீதிருந்த தலை - கொலையின் பின்னணி வௌியானது

May 13, 2026 - 09:29 PM -

0

சிலை மீதிருந்த தலை - கொலையின் பின்னணி வௌியானது

அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவரைச் சுட்டுக் கொன்று, அவரது தலையைத் துண்டித்து, அப்பகுதியில் உள்ள ரத்னாவலி தேவியின் சிலையின் கைகளில் வைத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட ஒருவரின் சகோதரர் கொல்லப்பட்டமைக்கு பழிவாங்கும் நோக்கிலேயே இந்தக் கொலை அரங்கேற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அத்துடன், தற்போது விளக்கமறியலில் உள்ள ஒருவரே இந்தக் கொலையை முழுமையாக வழிநடத்தியுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தகவல்கள் வௌியாகியுள்ளன. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

சம்பவத்தில் உயிரிழந்தவர் 34 வயதுடைய 'பொடி' என்ற லக்மால் சந்தருவன் என கண்டறியப்பட்டுள்ளது. 

கடந்த 11 ஆம் திகதி இரவு இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதுடன் அன்றைய தினம் உயிரிழந்தவரின் பிறந்தநாள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

கொலை செய்யப்பட்ட 'பொடி 2025 பெப்ரவரி 2 ஆம் திகதி மாமடல பகுதியில் நடந்த முக்கொலைச் சம்பவத்தின் சந்தேக நபராவார். 

அவர் மார்ச் 30 ஆம் திகதி பிணையில் விடுதலையாகி வந்திருந்தார். 

மெத்த லொக்கு எனப்படும் சலித உதயங்க மல்லிகாராச்சி, சமீர உதயங்க மற்றும் சாரங்க தர்ஷன ஆகிய மூவரே இந்தக் கொலையைச் செய்துள்ளனர். 

இவர்களைக் கொல்லப்பட்டவரின் மனைவி அடையாளம் காட்டியுள்ளார். 

'சமீர உதயங்க' சம்பவ தினமே கைது செய்யப்பட்ட நிலையில், ஏனைய இருவரும் இன்று (13) தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். 

கொல்லப்பட்ட 'பொடி' உள்ளிட்ட குழுவினரால் முன்னதாகக் கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான 'மெத்த பொடி' என்பவர், தற்போது கைது செய்யப்பட்டுள்ள 'மெத்த லொக்கு' என்பவரின் மூத்த சகோதரர் ஆவார். 

தனது சகோதரனின் மரணத்திற்குப் பழிவாங்கவே இவர் இந்தக் கொலையைச் செய்துள்ளதாகக் கருதப்படுகிறது. சட்டவிரோத மதுபான வியாபாரம் தொடர்பான தகவல்களைப் பொலிஸாருக்கு வழங்கியதாக ஏற்பட்ட சந்தேகமே இந்த மோதல்களுக்குக் காரணமாகும். 

இந்தக் கொலையைச் செய்துவிட்டு, அதன் பின்னரான அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் தலையைத் துண்டித்து சிலையில் வைக்கும் திட்டத்தை, 'மெத்த பொடியின் தாயாரின் சகோதரரான ரஞ்சித் பிரியந்த எதிரிவீர எனப்படும் 'கருணா லொக்கா' என்பவரே தீட்டியுள்ளதாகப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

குற்றச்சாட்டுக்கள் பலவற்றைக் கொண்ட 'கருணா லொக்கா', இந்தக் கொலை நடந்த தினமே தமக்கு எதிரான பிடியாணை ஒன்றுக்காக நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இது இந்தக் கொலைப் பழியிலிருந்து தப்பிப்பதற்காக அவர் மேற்கொண்ட ஒரு தந்திரமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

சட்டவிரோத மதுபான விற்பனையால் ஏற்பட்ட பகையே இந்தத் தொடர் கொலைகளுக்குக் காரணமென பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். 

மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அமில ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title