Header Logo

செய்திகள்
ரயில் பாதையின் பாகங்களை அகற்றியவருக்கு விளக்கமறியல்

May 17, 2026 - 03:11 PM -

0

 ரயில் பாதையின் பாகங்களை அகற்றியவருக்கு விளக்கமறியல்

வனவாசல மற்றும் களனி ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையின் பாகங்களைக் கழற்றிய சந்தேக நபரும், அந்தப் பாகங்களை கொள்வனவு செய்த நபரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சந்தேகநபர்கள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி அவர்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று (16) அதிகாலை களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் ஒன்று விபத்துக்குள்ளானது. 

இரண்டு ரயில் பாதைகளுக்கு இடையே ரயில்களைப் பாதை மாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் 'பொய்ண்ட்' பகுதியின் இரும்புகளை அகற்றியமையே இந்த விபத்துக்குக் காரணம் என ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க தெரிவித்தார். 

பேலியகொட பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, இந்த ரயில் பாதையின் பாகங்களைக் கழற்றிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார். 

இவர் போதைப்பொருளுக்குக் கடுமையாக அடிமையானவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்த இரும்புப் பாகங்களை 3 ஆயிரம் ரூபாய்க்கு கொள்வனவு செய்த மற்றுமொரு நபரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ

காணொளி
கஞ்சி வழங்கும் நிகழ்வு!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைவருக்கும் சட்டம் சமன்!

அனைவருக்கும் சட்டம் சமன்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

title