Header Logo
SLIC
உலகம்
ரஷ்ய மீதான உக்ரைன் தாக்குதலில் நால்வர் பலி

May 17, 2026 - 04:37 PM

ரஷ்ய மீதான உக்ரைன் தாக்குதலில் நால்வர் பலி
Mobitel Inner 1278
EDEX Inner

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவைக் இலக்கு வைத்து உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

இது கடந்த ஓராண்டு காலத்தில் உக்ரைன் நடத்திய அதிகளவான ட்ரோன் தாக்குதல் என ரொயிட்டர்ஸ் தெரிவித்துள்ளது. 

குறித்த தாக்குதல்களில் சுமார் 4 பேர் உயிரிழந்ததாக ரஷ்ய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 

அதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உக்ரைனுக்குச் சொந்தமான 1,000க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போர் தொடங்கியதில் இருந்து, கடந்த இரண்டு நாட்களில் கிவ் நகர் மீது ரஷ்யா நடத்திய மிக மோசமான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பின்னர், உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்யாவை பழித்தீர்க்க போவதாக கூறியிருந்தார். 

இத்தாக்குதலை உறுதிப்படுத்தும் வகையில், ட்ரோன் ஒன்று பறக்கும் காட்சியையும், கரும்புகை எழும்பி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயலும் காட்சியையும் உள்ளடக்கிய வீடியோ ஒன்றையும் உக்ரைன் ஜனாதிபதி ஷெலென்ஸ்கி தனது 'X' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷெலென்ஸ்கி, ரஷ்யா போரை நீடிப்பதற்கும், எங்களது நகரங்கள் மற்றும் மக்கள் குடியிருப்புகள் மீது நடத்தும் தாக்குதல்களுக்கும் நாங்கள் வழங்கும் பதிலடிகள் முற்றிலும் நியாயமானவை என்று குறிப்பிட்டுள்ளார்.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278