Header Logo

செய்திகள்
ஒரே குடும்பத்தின் இரு சகோதரர்கள் நீரில் மூழ்கி பலி

May 17, 2026 - 09:31 PM -

0

ஒரே குடும்பத்தின் இரு சகோதரர்கள் நீரில் மூழ்கி பலி

கெக்கிராவை, சமகிகம பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கல் குவாரி (கல் அகழ்வு குழி) ஒன்றில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் இன்று (17) பிற்பகல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 

ஹபுத்தளை பகுதியைச் சேர்ந்த 39 மற்றும் 41 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவர்கள் உட்பட ஐந்து பேரடங்கிய குழுவினர் அங்கு நீராட சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அவர்களில் மூவர் நீராடிவிட்டுத் திரும்பியுள்ளனர். 

எனினும், இவ்விரு சகோதரர்களும் அங்கேயே தங்கியிருந்த போதே இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்படுகின்றது. 

இக்குழுவினர் கெக்கிராவையில் உள்ள பாடசாலை ஒன்றின் கட்டட நிர்மாணப் பணிகளுக்காக இப்பகுதிக்கு வருகை தந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இச்சம்பவம் தொடர்பாகக் கெக்கிராவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
கஞ்சி வழங்கும் நிகழ்வு!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைவருக்கும் சட்டம் சமன்!

அனைவருக்கும் சட்டம் சமன்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

title