Header Logo
SLIC
மலையகம்
மலையக மக்கள் மீதான அடக்குமுறைகளை தடுக்க நடவடிக்கை

May 18, 2026 - 08:01 AM

மலையக மக்கள் மீதான அடக்குமுறைகளை தடுக்க நடவடிக்கை
Mobitel Inner 1278
EDEX Inner

மலையக மக்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அடக்குமுறைகளுக்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கப் பிரதீப் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள பிரதி அமைச்சர், மலையக பெருந்தோட்ட பகுதிகளில் வாழுகின்ற மக்களுக்கு பெருந்தோட்ட நிறுவனங்களினால் இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். 

இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக காலத்திற்கும் பதிவாகின்றன. 

கடந்த ஏப்ரல் மாதம் 24ம் திகதி இரத்தினபுரி நீலகாமம் தோட்டத்தில் தொழிலாளி ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார். 

குறித்த சம்பவம் இடம்பெற்று சுமார் 6 மணித்தியாலயத்திற்குள் 9 பேர் கொண்ட குழுவினரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். 

அதன் பிறகு சம்பந்தப்பட்ட பெருந்தோட்ட நிறுவனத்திற்கு எதிராக அமைச்சின் ஊடாக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் முன்னோக்கி கொண்டு செல்லப்பட்டு கொண்டிருக்கின்றன 

குறித்த தோட்டத்தில் உள்ள 20 குடும்பங்களுக்கும் காணிகளை வழங்க அந்த பெருந்தோட்ட நிறுவனம் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது. 

இம்மாதம் 6ம்திகதி பெரிய மஸ்கெலியா மொக்கா தோட்டப் பகுதியில் தோட்ட முகாமையாளரினால் காவலாளி ஒருவர் தாக்கப்பட்டார். 

அதேபோல் நுவரெலியா மாவட்டத்தில் டெல்மார் தோட்டத்திலும் அங்குள்ள முகாமையாளரினால் தொழிலாளி ஒருவர் தாக்கப்பட்டார். 

இவ்வாறு பல சம்பவங்கள் கடந்த காலத்தை போல தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. 

எனவே இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாமல் இருக்க, எமது அமைச்சின் செயலாளருடன் இனைந்து விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளோம். 

இதன்மூலம் இவ்வாறான பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வுகளை பெற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278