May 18, 2026 - 09:03 AM -
0
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு நேற்று (17) மன்னார் பிரதான பேருந்து நிலைய பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் பிரதான பேருந்து நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
அங்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், தமிழரசு கட்சியின் நகரசபை உறுப்பினர்கள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வை நினைவுபடுத்தும் விதமாக வருடாந்தம் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
--
