Header Logo
Mogo Academy

கிழக்கு
மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

May 18, 2026 - 12:24 PM -

0

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
Mobitel inner

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் குருமன்வெளி வட்டாரக் கிளையின் ஏற்பாட்டில், இன்று (18) குருமன்வெளி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. 

குருமன்வெளி வட்டார உறுப்பினர் அ.பத்மதேவு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஈகைச்சுடரேற்றி மலரஞ்சலி இந்நிகழ்வின் பிரதான அங்கமாக, ஈழப்போராட்டத்தில் தனது காலினை இழந்த மாற்றுத்திறனாளி போராளியான கோபாலசிங்கம் ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக அங்கு கூடியிருந்தவர்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.அரசியல் பிரமுகர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தப்பட்டன. 

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மண்முனை தென் எருவில் பற்று (களுதாவளை) பிரதேச சபையின் தவிசாளர் மே.வினோராஜ், உபதவிசாளர் அ.விசிகரன், போரதீவுப்பற்று பிரதேச சபை உபதவிசாளர் த.கயசீலன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள்,கட்சியின் முக்கியஸ்தர்கள், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு தங்களது அஞ்சலிகளைத் செலுத்தினர். 

இறுதி யுத்தத்தின்போது தமிழ் மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றி, மரணத்தின் விளிம்பில் உப்புக் கஞ்சியை மட்டும் அருந்தி உயிர் தப்பிய அவல நிலையை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் "முள்ளிவாய்க்கால் கஞ்சி" வழங்கும் நிகழ்வும் இங்கு உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara