Header Logo
Mogo Academy

ஜோதிடம்
கனவில் பல்லி பார்த்தால் என்ன பலன் கிடைக்கும்?

May 18, 2026 - 03:15 PM -

0

கனவில் பல்லி பார்த்தால் என்ன பலன் கிடைக்கும்?
Mobitel inner

தூங்கும்போது கனவு வருவது இயல்பானது தான். ஆனால் அவற்றில் பெரும்பாலான கனவுகள் நாம் தூங்கி எழும்போது மறந்து விடுவோம். ஆனால் சில கனவுகள் பல நாட்கள் ஆகி இருக்கும் நம் நினைவில் இருந்து விலகாமல் இருக்கும். நாம் கனவில் காணக்கூடிய சில விஷயங்கள் நம் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைகின்றன. இந்த விதத்தில் ஒருவர் பல்லியை கனவில் கண்டால் அது அந்த நம்பருக்கு எப்படிப்பட்ட பலனை தரும் என்பதை கனவு சாஸ்திரம் கூறுகிறது என்பதை தெரிந்து கொள்வோம். 

கனவு சாஸ்திரத்தின்படி, உங்களுடைய கனவில் ஒரு பல்லியை உங்களுடைய உடலின் மீது விழுவது போன்று கண்டால், வரும் நாட்களில் உங்களுடைய எதிரிகளால் குறிப்பிடத்தக்க பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். 

கனவில் ஒரு பல்லி அவரின் தலையின் மீது ஏறுவது போல கண்டால், அந்த நபருக்கு உடல் நல பிரச்சினைகள் ஏற்படும். 

அதை போல ஒருவருடைய இடது தோளில் மீது பல்லி ஏறுவதை கண்டால் அவருக்கு புதிய ஆற்றலும், மன தைரியமும் உருவாகும் என்று அர்த்தம். 

அதுவே பல்லி உங்களுடைய வலது தோளில் ஏறுவதாக கண்டாலும் நீங்கள் மன அழுத்தத்தைச் சந்திக்கக்கூடும் என்று அர்த்தம்.​ 

ஒருவர் தன்னுடைய கனவில் பல்லி ஓடிப் போவது போல கண்டால் அது இந்த நபரின் வாழ்க்கையில் மங்களகரமான சில விஷயங்கள் நடக்கும் என அறிகுறியாக காட்டுகிறது. நீண்ட நாட்களாக சந்தித்து வரக்கூடிய மன அழுத்தம் அல்லது பிரச்சினைகள் நீங்கும் என அது குறிப்பிடுகிறது. 

நீங்களும் உங்களுடைய கனவில் ஒரு பல்லியை கொல்வது போன்ற கனவு கண்டால், அந்த நபருக்கு நல்ல பலன்களை தரக்கூடியதாக கருதப்படுகிறது. இந்த கனவு ஆனது உங்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் இவரை முடிவுக்கு வரும். வளமான வாழ்க்கை தேடி வரும். உங்கள் மன தைரியம் உயரம் என்பதால் கஷ்டமான சூழ்நிலை சமாளிக்க முடியும். 

உங்கள் கனவில் நீங்கள் பல பல்லிகளைக் பார்க்க நேர்ந்தால், அது உங்களுடைய வாழ்க்கையில் ஒரே நேரத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரும் கடினமான காலமாக அமையும். உங்களுடைய தொழில் வாழ்க்கையில் சில தடைகளையும் அதனால் மன அழுத்தம் சந்திக்க நேரிடும். 

உங்களுடைய கனவில் ஒரு சிறிய குட்டி பல்லியை காண்பது, வரும் காலத்தில் உங்களுக்கு சற்று சிரமங்களை தரக்கூடியதாக அமையும். எதிர்பார்த்த விஷயங்கள் தாமதமாக வாய்ப்பு உண்டு. நீங்கள் மேற்கொள்ளும் வேலையை முடிக்க கடின உழைப்ப தேவைப்படும்.


MOST READ

காணொளி
மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

Mobitel Upahara