Header Logo

இந்தியா
புற்றுநோய்க்கு புதிய மருந்தை அறிமுகம் செய்த இந்தியா!

May 18, 2026 - 05:21 PM -

0

புற்றுநோய்க்கு புதிய மருந்தை அறிமுகம் செய்த இந்தியா!

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்களுக்கு அளிக்கப்படும் கீமோதெரபி சிகிச்சைக்கு மாற்றாக, புதிய வகை நோய் எதிர்ப்பு மருந்தான டெசென்ட்ரிக் எனப்படும் அட்சோலிசுமாப் மருந்தை, இந்தியாவின் ரோச் பார்மா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

இந்த மருந்து பொதுவாக தொடைப் பகுதியிலும் தோலுக்கு அடியிலும் நேராக செலுத்தப்படுகிறது. இந்த மருந்து செலுத்துவதற்கு ஏழு நிமிடங்கள் மட்டுமே ஆகும். 

இந்த மருந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தில் மறைந்து இருக்கும் PD-L1 எனப்படும் புரதத்தை தடுக்கிறது. இதன்மூலம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்கள், புற்று நோய் செல்களை திறம்பட அடையாளம் கண்டு தாக்கி அழிக்க உதவுகிறது. 

ஒரு டோஸ் மருந்தின் விலை 3.7 லட்சம் ரூபா எனவும், மேலும் புற்றுநோய் சிகிச்சையின்போது 6 டோஸ்கள் வரை தேவைப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த புதிய முறை சிகிச்சை நோயாளிகள் மற்றும் வைத்தியசாலையின் சுமையைக் குறைக்கும். இருப்பினும் இந்த சிகிச்சையின் மிக அதிக விலை, பாமர மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைவருக்கும் சட்டம் சமன்!

அனைவருக்கும் சட்டம் சமன்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

title