Header Logo

வடக்கு
ஆடுகளைப் பட்டியில் அடைக்கச் சென்ற இளைஞர் சடலமாக மீட்பு!

May 18, 2026 - 05:44 PM -

0

ஆடுகளைப் பட்டியில் அடைக்கச் சென்ற இளைஞர் சடலமாக மீட்பு!

மன்னார் பகுதியில் தனது ஆடுகளைப் பட்டியில் அடைக்கச் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. 

மன்னார் கள்ளிக்கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த இளைஞன், தனது வீட்டில் இருந்து ஆட்டுப்பட்டி உள்ள இடத்தை நோக்கிச் சென்றதாகக் எமது செய்தியாளர் தெரிவித்தார். கடந்த 16 ஆம் திகதி அப்பகுதியில் கடும் மழை பெய்துள்ளது. 

இந்த நிலையில், அந்த இளைஞன் ஆட்டுப்பட்டிக்கு அருகில் இருந்து கடந்த 16 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த இளைஞருக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

கடந்த 16 ஆம் திகதி அவருக்கு அவ்வாறு வலிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதன் காரணமாக அங்கு தேங்கிக் கிடந்த நீரில் வீழ்ந்து அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இளைஞரின் மரணம் தொடர்பாகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைவருக்கும் சட்டம் சமன்!

அனைவருக்கும் சட்டம் சமன்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

title