Header Logo

செய்திகள்
மல்வானை காணி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

May 18, 2026 - 08:05 PM -

0

மல்வானை காணி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

இன்றைய நாட்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள மல்வானை காணியை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் கையகப்படுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவப் பிரதிநிதிகளுடன் இன்று (18) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

குறித்த காணி தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வு ஒன்றினை மேற்கொண்ட பின்னர், அதனைப் பொருத்தமான நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அங்கிருந்த மாணவர்களிடம் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 

பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளுக்குச் செவிசாய்ப்பதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாம் தயாராக இருப்பதாகவும் பிரதமர் அங்கு வலியுறுத்தினார். 

அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி, விரிவான கண்காணிப்புக்கு பின்னரே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஹரினி அமரசூரிய அங்கு மேலும் சுட்டிக்காட்டினார். 

"பல வருடங்களுக்குப் பின்னர்தான் பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களுக்காக வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 60 சதவீதமாகக் காணப்பட்ட உயர்கல்வித் துறையின் வரவு செலவுத் திட்ட முன்னேற்றத்தை, 2025 ஆம் ஆண்டில் 80 சதவீதம் வரை அதிகரிக்க எம்மால் முடிந்தது. 

அவை மாணவர்களின் குரலுக்குச் செவிசாய்த்தமைக்கும், அரசாங்கம் என்ற ரீதியில் மாணவர் நலன்புரிப் பிரச்சினைகளில் தலையிட்டமைக்குமான பலன்களாகும். மல்வானை காணியையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கையகப்படுத்தி, சாத்தியக்கூறு ஆய்வு ஒன்றை நடத்திய பின்னர், அதனைப் பொருத்தமானதொரு உயர்கல்வி நிறுவனத்திடம் ஒப்படைக்க நாம் நடவடிக்கை எடுப்போம்." என்றார்.

Comments
0

MOST READ

காணொளி
முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைவருக்கும் சட்டம் சமன்!

அனைவருக்கும் சட்டம் சமன்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

title