Header Logo

செய்திகள்
ஓகஸ்ட் மாதத்தில் 104 புதிய மெட்ரோ பேருந்துகள் இறக்குமதி

May 18, 2026 - 10:16 PM -

0

ஓகஸ்ட் மாதத்தில் 104 புதிய மெட்ரோ பேருந்துகள் இறக்குமதி

நாட்டின் பொதுப் போக்குவரத்துச் சேவையை வினைத்திறன்மிக்கதாக மாற்றுவதற்காக, எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் 104 புதிய மெட்ரோ (Metro) பேருந்துகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவுள்ளன. 

அதற்குரிய ஒப்பந்தம் இன்று (18) கையெழுத்திடப்பட்டதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. 

ஒப்பந்தத்தின் பிரகாரம், இந்த 104 நவீன பேருந்துகளும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்குள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு நிறைவு செய்யப்படவுள்ளன. 

தற்போது மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு கடவத்தை மற்றும் ரத்மலானை போன்ற பகுதிகளில் புதிய மெட்ரோ சேவை முனையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. 

அதனுடன், ஓகஸ்ட் மாதத்தில் இப்பேருந்துகளைப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்துவதன் மூலம், நாட்டின் பொதுப் போக்குவரத்தில் ஒரு தரமான திருப்புமுனையை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாகப் போக்குவரத்து அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைவருக்கும் சட்டம் சமன்!

அனைவருக்கும் சட்டம் சமன்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

title