Header Logo

செய்திகள்
டித்வாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான டிஜிட்டல் இழப்பீட்டு முகாமைத்துவ அமைப்பு

May 18, 2026 - 11:55 PM -

0

டித்வாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான டிஜிட்டல் இழப்பீட்டு முகாமைத்துவ அமைப்பு

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அனர்த்த நிவாரண சேவை மையம், நோர்வே ராஜ்யத்தின் நிதி உதவி மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், ஐக்கிய நாடுகளின் தன்னார்வத் திட்டம் ஆகியவற்றின் ஆதரவுடன் உருவாக்கிய, புதிய டிஜிட்டல் நட்டஈடு முகாமைத்துவ அமைப்பு மற்றும் சமூக வினவல் பொறிமுறை இன்று (18) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 

இது 'டித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான, மிகவும் வெளிப்படையான மற்றும் எளிதில் அணுகக்கூடிய சமூக ஆதரவு சேவைகளை வழங்கும் ஒரு செயல்முறையாகும். 

இந்த டிஜிட்டல் அமைப்புகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவின் பங்கேற்புடன் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 

அரசாங்க அதிகாரிகள் மற்றும் இடரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிர்வாக ரீதியிலான சிரமங்களைக் குறைக்கும் வகையில் இந்த நட்டஈடு முகாமைத்துவ அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்டவர்கள் தங்களது கிராம உத்தியோகத்தர் ஊடாக ஒன்லைன் மூலம் நட்டஈட்டுக் கோரிக்கைகளை சமர்ப்பிக்க முடியும். 

அதேபோன்று, இன்று சமூக வினவல் பொறிமுறையும் ஆரம்பிக்கப்பட்டதுடன், இந்த பொறிமுறையின் ஊடாக பொதுமக்கள் தங்களது வினவல்களை நேரடியாக தேசிய அனர்த்த நிவாரண சேவை மையத்திற்கு சமர்ப்பிக்க முடியும். 

இவ்வமைப்பிற்கு வார நாட்களில் மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை, சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இயங்கும் 071 6 807 807 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்தை அழைப்பதன் மூலம் அல்லது அதற்குரிய QR குறியீடு (QR Code) ஊடாக வினவல்களைச் சமர்ப்பிக்கலாம். 

ஆரம்ப பரிசீலனைக்குப் பின்னர், தேவையான நடவடிக்கைகள் மற்றும் தொடர் கண்காணிப்பிற்காக ஒவ்வொரு வினவலும் NDRSC இன் தேசிய அல்லது பிராந்திய மட்டத்திலான உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். 

ஒவ்வொரு வினவலும் சமர்ப்பிக்கப்படும் போது, அதனைச் சமர்ப்பிப்பவருக்கு ஒரு தனித்துவமான குறியீடு (Unique Code) வழங்கப்படும். 

சமூக வினவல் பொறிமுறைக்குரிய QR குறியீடு அல்லது உடனடி தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இந்தத் தனித்துவமான குறியீட்டை முன்வைத்து, தங்களது வினவல்களின் முன்னேற்ற நிலையை அவர்கள் அறிந்துகொள்ள முடியும். 

இந்த முயற்சியானது ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைவருக்கும் சட்டம் சமன்!

அனைவருக்கும் சட்டம் சமன்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

title