Header Logo

செய்திகள்
சமையல் கலைஞர் ஒருவர் நில்வலா கங்கைக்குள் விழுந்து மாயம்

May 19, 2026 - 10:40 AM -

0

சமையல் கலைஞர் ஒருவர் நில்வலா கங்கைக்குள் விழுந்து மாயம்

தமது வேலைக்காக காலி நோக்கிச் செல்வதற்காக வந்திருந்த சமையல் கலைஞர் ஒருவர், அக்குரஸ்ஸ நகரப் பகுதியிலுள்ள நில்வலா கங்கையின் பாதுகாப்பற்ற இடமொன்றில் இருந்து ஆற்றுக்குள் விழுந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு காணாமல் போயுள்ளவர் மொரவக்க, ஒலியமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது. 

அவர் பேருந்திலிருந்து இறங்கி, தனது காலணியை அணிய முயன்றபோதே இவ்வாறு ஆற்றுக்குள் விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இருப்பினும், அவர் அந்த நேரத்தில் மதுபோதையில் இருந்ததாக அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார். 

பொலிஸ் உத்தியோகத்தர்களும் பிரதேசவாசிகளும் இணைந்து அவரைத் தேடும் பணிகளை முன்னெடுத்த போதிலும், இதுவரை அவர் குறித்த எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.

MOST READ

காணொளி
காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

பாராளுமன்றில் இன்று...

பாராளுமன்றில் இன்று...

அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

title