Header Logo

சினிமா
Divorce கிடைக்கும் வரை நான் நடிக்கப்போவதில்லை!

May 16, 2026 - 12:23 PM -

0

Divorce கிடைக்கும் வரை நான் நடிக்கப்போவதில்லை!

ரவி மோகன் விவாகரத்து வழக்கில், கெனிஷா மீது இடைக்கால தடை, ஆன்லைன் தாக்குதலால் மனமுடைந்த கெனிஷா சென்னை, இசை, சிகிச்சை, சமூக வலைதளங்களை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். 

நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வசித்து வருகிறார். இதையடுத்து விவாகரத்துக் கோரி அவர் தொடர்ந்த வழக்கு, தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே, ரவி மோகனின் வாழ்க்கையில் பின்னணி பாடகி கெனிஷா முக்கிய நபராக மாறினார். ரவி மோகன், ஆர்த்தி பிரச்னைக்குக் காரணம் கெனிஷாதான் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது. 

ரவி மோகனின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ‘ரவி மோகன் ஸ்டுடியோஸில்’ கெனிஷா முக்கியப் பங்கு வகித்து வருகிறார். பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஜோடியாக வலம்வருவது இணையத்தில் வைரலாகி வந்தது. குறிப்பாக, அண்மையில் கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், கெனிஷா மேடை ஏறும் முன் ரவி மோகனின் காலில் விழுந்து ஆசி பெற்றுச் சென்ற காட்சி, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. 

இதனிடையே, சமூக வலைதளங்களில் தனது பதிவுகளில் ஆர்த்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர்களுக்கு கெனிஷா பதிலடி கொடுத்து வந்தார். இதனால் ஆர்த்தி குறித்து கெனிஷா அவதூறாகப் பேசுவதாக குற்றம்சாட்டி, ஆர்த்தி தரப்பினர் நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கில், எந்த ஊடகத்திலும் ஆர்த்திக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்று நீதிமன்றம் கெனிஷாவுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது. 

இந்தத் தடை உத்தரவைத் தொடர்ந்து, ‘நடிகர் ரவி மோகனின் குடும்பத்தைப் பிரிக்க வந்தவர்’ எனத் தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான கெனிஷா, சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் அதிரடி வீடியோ ஒன்றை வெளியிட்டார். ரவி மோகன் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு ஒரு தெரபிஸ்டாக மட்டுமே தான் உதவத் தொடங்கியதாக குறிப்பிட்டுள்ளார். 

ஏற்கனவே பெற்றோரையும், 18 வயதில் திருமணமாகி தனது கருவையும் இழந்த வலியைச் சுமக்கும் தான் ஒருபோதும் இன்னொருவர் குடும்பத்தைக் கெடுக்க நினைக்க மாட்டேன் என்றும் அவர் கண்ணீருடன் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், கடந்த சில நாட்களாகத் தன்னை நோக்கி வீசப்பட்ட விமர்சனங்களாலும், ஆன்லைன் கிண்டல்களாலும் மனமுடைந்து போனதாக தெரிவித்துள்ள கெனிஷா, சென்னையை விட்டு வெளியேறுவதாகவும், தனது இசை மற்றும் சிகிச்சை பணிகளை முற்றிலுமாகக் கைவிடுவதாக அறிவித்துள்ளார். 

அவரது இன்ஸ்டா பதிவில், நிஜமான அன்பையும், விசுவாசத்தையும் காட்ட இந்த உலகம் எனக்கு இடம் தரவில்லை என்று வேதனை தெரிவித்துள்ள அவர், ‘இனி ரவி மோகன் உங்கள் வசம்’ என்று கூறி அவருடனான தொடர்பை முறித்துக் கொள்வதாக கூறியுள்ளார். மேலும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறுவதாக அவர் தெரிவித்துள்ளார். கெனிஷாவின் இந்த முடிவு, ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து விவகாரத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ரவி மோகன், "சாதுவா இருந்த என்னை நிறைய பேர் சீண்டலாம் என நினைக்கிறார்கள். இத்தனை நாள் பேசாமல் இருந்ததே முட்டாள்தனம். விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்கப்போவதில்லை. சாது மிரண்டால் காடுகொள்ளாது. 23 வருடம் இரவு பகலாக உழைத்துள்ளேன். என்னுடைய 90% படங்கள் வெற்றியடைந்துள்ளன. என் அப்பாவும் என் அண்ணும் நான்கு வருடங்கள் வேலை செய்யவில்லை. இளம் வயதில் என் குடும்பத்திற்காக உழைத்தேன். என் குடும்பத்திற்காக நான் இருக்கிறேன். என் குழந்தையை பார்க்க விடவில்லை" என்று தெரிவித்தார். 

மேலும் பேசிய அவர், "என்னுடைய கடந்த வாழ்க்கையில் 14 வருடம் வாழ்ந்துள்ளேன். பெமினிஷம் என்றால் என்ன தெரியாமா?. என் படங்களில் பெண்ணின் உரிமையை பற்றி பேசுகிறேன். நான் தப்பா பெண்களை பேசுவேனா?. என் தாய் அப்படி என்னை வளர்க்கவில்லை. என்னுடைய புள்ளையை நான் எப்படி விட்டுவிடுவேன். அவர்களுக்காவே நான் வாழ்ந்தேன். ஆனால் இன்று என் குழந்தைகளை பார்க்க விடுவதில்லை. பாடசாலைக்கு கூட பாதுகாவலர்கள் உடன் அனுப்புகிறார்கள். அந்த வாழ்க்கை வேண்டாம் என தெறித்து ஓடி வந்தேன். 

நான் எப்படி சூட்டிங் வர்றானு பாக்குறான் என சொல்கிறார்கள். அவர்களே தயாரிப்பாளராக்கியதே நான் தான். வீட்டைவிட்டு எதுவும் இல்லாமல் வந்தவன் நான். இன்று நான் வாடகை வீட்டில் வசிக்கிறேன். அவர்கள் கோடிக்கணக்கில் வைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள். என் தாய் Cyber புல்லிங் என்று நிற்கிறதோ?. ஒரு பெண் என்னை புரிந்துகொண்டது வந்தார். இப்போது அவரையும் (கெனிஷா) காலி செய்து அனுப்பிவிட்டார்கள். நான் பார்க்காத நடிகைகளா?. என் வேலையே அழகான பெண்களுடன் நடிப்பதுதான். 45 வயதில் அழகான பெண்கள் பின்னால் எப்படி செல்ல முடியும். 

என் பசங்களுக்காக வாய்யை மூடிகொண்டு இருந்தேன். என் அப்பா அம்மா அந்த பெண் வேண்டாம் என காலி விழுந்து கெஞ்சினார்கள். ஒரு சின்ன அன்பு இருந்திருந்தால் நான் வந்திருப்பேனா?. வாழ்க்கையில் அனைத்தையும் கொடுத்துவிட்டேன். எனக்கு நடந்தது மிகப்பெரிய அநியாயம். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை சுத்தம் செய்துவிட்டு மீண்டும் வருவேன். அதுவரை நான் நடிக்கப்போவதில்லை." என்று ஆக்ரோஷமாகவும் வேதனையுடன் கண்ணீருடனும் பேசினார்.

Comments
0

MOST READ

காணொளி
கஞ்சி வழங்கும் நிகழ்வு!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைவருக்கும் சட்டம் சமன்!

அனைவருக்கும் சட்டம் சமன்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

title