Header Logo

செய்திகள்
ஆற்றில் மிதந்த ஆணின் சடலம்

May 20, 2026 - 10:30 AM -

0

ஆற்றில் மிதந்த ஆணின் சடலம்

மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை (19) மாலை 5.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த வாவியில் சடலம் ஒன்று மிதப்பதைப் பார்த்த பொதுமக்கள் இது குறித்துப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினர்.


இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், அது ஓர் ஆணின் சடலம் எனக் கூறினர். எனினும், அவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. சடலத்தை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியைப் பெறும் நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

பாராளுமன்றில் இன்று...

பாராளுமன்றில் இன்று...

அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது!

பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது!

வன்னி மாவட்டம் கல்வியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது!

வன்னி மாவட்டம் கல்வியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது!

விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்!

விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

title