Header Logo

செய்திகள்
லொறி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

May 20, 2026 - 10:06 AM -

0

 லொறி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை ஏற்றிச்சென்ற லொறி ஒன்றின் மீது ஹுங்கம, கட்டகடுவ பகுதியில் வைத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

லொறி ஒன்றில் சட்டவிரோதமாக கால்நடைகள் கடத்தப்படுவதாக ஹுங்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று (20) காலை கட்டகடுவ பகுதியில் வீதித் தடை ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது.

எனினும், குறித்த லொறி வீதித் தடையையும் மீறி தப்பிச் சென்றுள்ளது.

இதனையடுத்து, பொலிஸார் அந்த லொறியைப் பின்தொடர்ந்து சென்று நிறுத்த முயன்ற போதிலும், அது நிறுத்தப்படாமல் பயணித்ததால், துப்பாக்கிச் சூடு நடத்தி லொறி நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது லொறியில் இருந்த நான்கு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஹுங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

பாராளுமன்றில் இன்று...

பாராளுமன்றில் இன்று...

அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது!

பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது!

வன்னி மாவட்டம் கல்வியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது!

வன்னி மாவட்டம் கல்வியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது!

விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்!

விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

title