Header Logo

செய்திகள்
யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் உயிரிழப்பு

May 20, 2026 - 11:23 AM -

0

யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசாரணைக்காக அழைக்கப்பட்ட நபர் ஒருவர், பொலிஸ் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த ப. சுரேஷ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விசாரணை ஒன்றிற்காக நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்திற்கு சுரேஷ்குமார் அழைக்கப்பட்டிருந்தார். இதற்கமைய அவர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றிருந்த வேளையில், அங்கு திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

அவரை பொலிஸார் உடனடியாக மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

பாராளுமன்றில் இன்று...

பாராளுமன்றில் இன்று...

அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது!

பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது!

வன்னி மாவட்டம் கல்வியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது!

வன்னி மாவட்டம் கல்வியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது!

விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்!

விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

title