Header Logo

செய்திகள்
அதிவேக வீதிகளின் வரவு செலவு குறித்து வௌியான தகவல்!

May 20, 2026 - 11:31 AM -

0

அதிவேக வீதிகளின் வரவு செலவு குறித்து வௌியான தகவல்!

இலங்கையிலுள்ள அனைத்து அதிவேக வீதிகளினதும் 312.57 கிலோமீற்றர் தூரத்திற்கான வருடாந்த பராமரிப்புச் செலவு 5,180.90 மில்லியன் ரூபாய் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் இன்று (20) பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைத் குறிப்பிட்டார்.

 

அதற்கமைய, அதிவேக நெடுஞ்சாலைகளின் பராமரிப்புச் செலவு விபரங்கள் பின்வருமாறு:

 

E1 -  தெற்கு அதிவேக வீதி: கொட்டாவையிலிருந்து மத்தல வரையிலான 200.45 கிலோமீற்றருக்கான மொத்தச் செலவு - 2,024.5 மில்லியன் ரூபாய்.

 

E2 - வெளிவட்ட வீதி: கொட்டாவையிலிருந்து  கெரவலபிட்டிய  வரையிலான 28.86 கிலோமீற்றருக்கான செலவு - 767.6 மில்லியன் ரூபாய்.

 

E3 - கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதி : பேலியகொடவிலிருந்து சீதுவை வரையிலான 25.8 கிலோமீற்றருக்கான செலவு - 834.1 மில்லியன் ரூபாய்.

 

E4 - மத்திய அதிவேக வீதி: மீரிகமயிலிருந்து குருநாகல் யக்கபிட்டிய வரையிலான 40.91 கிலோமீற்றருக்கான செலவு - 531.00 மில்லியன் ரூபாய்.

 

E5 - தெற்கு அதிவேக வீதி நீடிப்பு: அந்தரவெவவிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான 16.55 கிலோமீற்றருக்கான செலவு - 1,022.70 மில்லியன் ரூபாய்.

 

இதேவேளை, 2025 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் 2025 டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அனைத்து அதிவேக வீதிகளிலிருந்தும் கிடைத்த மொத்த வருமானம் 16,330.14 மில்லியன் ரூபாய் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

அதன்படி, வருமான விபரங்கள் பின்வருமாறு:

 

தெற்கு அதிவேக வீதி வருமானம்: 5,031.28 மில்லியன் ரூபாய்.

 

வெளிவட்ட வீதி வருமானம்: 4,347.32 மில்லியன் ரூபாய்.

 

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதி வருமானம்: 3,355.12 மில்லியன் ரூபாய்.

 

தெற்கு அதிவேக வீதி நீடிப்பு வருமானம்: 2,019.45... மில்லியன் ரூபாய்.

 

மத்திய அதிவேக வீதி வருமானம்: 1,576.97 மில்லியன் ரூபாய்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

பாராளுமன்றில் இன்று...

பாராளுமன்றில் இன்று...

அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது!

பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது!

வன்னி மாவட்டம் கல்வியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது!

வன்னி மாவட்டம் கல்வியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது!

விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்!

விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

title