May 20, 2026 - 02:05 PM -
0
போர் வீரர்கள் நினைவிடத்திற்கு அருகில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தான் தயாராக இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இன்று (20) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணை ஒன்றிற்காக வருகை தந்துவிட்டு வெளியேறும் போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே விமல் வீரவன்ச இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கேள்வி: போர் வீரர்கள் நினைவிடத்திற்கு அருகில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக வழக்குத் தொடரப்படுமா?
விமல் வீரவன்ச: "போர் வீரர்களை நினைவுகூர்ந்து, மலர்க்கொத்து ஏந்திச் சென்று அவர்களுக்கு அந்த மரியாதையைச் செலுத்துவதற்கு எடுத்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்றால், அத்தகைய வழக்கை எதிர்கொள்ள நாங்கள் எந்த வகையிலும் தயங்க மாட்டோம்."
