Header Logo

செய்திகள்
இரு வேறு இடங்களில் இரண்டு கொலைகள்!

May 21, 2026 - 06:23 AM -

0

இரு வேறு இடங்களில் இரண்டு கொலைகள்!

சீதுவை மற்றும் கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகளில் இரண்டு மனிதக் கொலைகள் இடம்பெற்றுள்ளதுடன், இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகலங்கமுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக சீதுவை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

 

அதன்படி, அந்த வீட்டைச் சோதனையிட்டபோது, ​​படுக்கையறை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பயணப் பையொன்றுக்குள் பெண் ஒருவரின் சடலம் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

 

இவ்வாறு உயிரிழந்தவர் சீதுவை, முகலங்கமுவ பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய பெண் ஆவார்.

 

உயிரிழந்த பெண் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாகவும், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராக்கள் கழற்றி அகற்றப்பட்டிருப்பதுடன், 

 

தொலைபேசி வயர்களும் துண்டிக்கப்பட்டுள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

இன்று (21) மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை நடத்தப்படவுள்ளதுடன், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதேவேளை, கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஃபர்கியுசன் வீதி பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கிரேன்ட்பாஸ் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

இவ்வாறு உயிரிழந்தவர் முகத்துவாரம் உயன அடுக்கு மாடிக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபராவார்.

 

சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக கிரேன்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது!

பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது!

வன்னி மாவட்டம் கல்வியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது!

வன்னி மாவட்டம் கல்வியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது!

விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்!

விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

title