Header Logo

செய்திகள்
RDA பொறியியலாளர் சங்கம் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில்

May 21, 2026 - 07:21 AM -

0

RDA பொறியியலாளர் சங்கம் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில்

சம்பள முரண்பாடு உள்ளிட்ட இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இன்று (21) முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தங்களது கோரிக்கைகள் தொடர்பாக இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்திய போதிலும், அங்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாமை காரணமாகவே இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த தொழிற்சங்க நடவடிக்கை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் உமேஷ் அலுதாபொல,

"RDA பொறியியலாளர்கள், அதிகாரசபைக்கு வெளியே உள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் அல்லது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள் என பல குழுக்களின் கூட்டங்களில் பங்கேற்கிறார்கள். இந்த கூட்டங்களில் இருந்து விலகியிருக்கவும், அத்துடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் கீழ் ஒப்படைக்கப்படாத, ஆனால் தேசிய தேவையாகக் கருதி மேற்கொள்ளப்படும் (RDA உடன் நேரடியாக தொடர்பில்லாத) அனைத்துப் பணிகளிலிருந்தும் விலகியிருக்கவும் தீர்மானித்துள்ளோம்.

இதன் தாக்கம் என்னவென்றால், திட்ட ஒருங்கிணைப்புப் பணிகளில் நாங்கள் பங்கெடுக்காததால் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். தீர்வு கிடைக்காவிட்டால், இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுப்போம்."

Comments
0

MOST READ

காணொளி
அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது!

பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது!

வன்னி மாவட்டம் கல்வியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது!

வன்னி மாவட்டம் கல்வியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது!

விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்!

விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

title