Header Logo
Mogo Academy

சினிமா
நான் கமல் பொண்ணு இல்ல, என் பேரு பூஜா!

May 21, 2026 - 12:37 PM -

0

நான் கமல் பொண்ணு இல்ல, என் பேரு பூஜா!
Mobitel inner

சென்னையில் எங்கு பார்த்தாலும் அப்பா கமல் ஹாசனின் புகழ். இதனால் சிறுவயதில் தனக்கென ஒரு அடையாளம் இல்லாமல் தவித்த ஸ்ருதி ஹாசன் ஒரு செம சம்பவம் பண்ணி இருக்கிறார். 

சினிமாவுல 'உலக நாயகன்' கமல் ஹாசனோட ஆதிக்கம் பத்தி சொல்லவே தேவையில்லை. அப்படிப்பட்ட ஒருத்தரோட வீட்ல பொறந்தா, பிறக்கும்போதே செலிபிரிட்டி ஸ்டேட்டஸ் கிடைச்சுடும். ஆனா, உலகமே கமல் நடிப்பை கொண்டாடிட்டு இருந்தப்போ, அவரோட சொந்த மகள் ஸ்ருதி ஹாசன் மட்டும், "நான் இவங்க பொண்ணே இல்ல"னு பொய் சொல்லிட்டு திரிஞ்சிருக்காங்க! என்னடா இது, சினிமா ட்விஸ்ட் மாதிரி இருக்குனு நினைக்கிறீங்களா? அதன் பின்னணியை பார்க்கலாம். 

ஸ்ருதி ஹாசன் இன்னைக்கு ஒரு ஆல்-ரவுண்டர். நடிகை, பாடகி, மியூசிக் கம்போசர்னு எல்லாத்துலயும் தனக்கென ஒரு முத்திரை பதிச்சிருக்காங்க. ஆனா சின்ன வயசுல, 'கமல் ஹாசன் மகள்'ங்கிற அந்த அடையாளம் அவங்களுக்கு ஒரு பெரிய பாரமா இருந்துச்சாம். எங்க போனாலும், "ஏய் பாரு, இது கமல் ஹாசன் பொண்ணுல?"னு எல்லாரும் கை காட்டி பேசும்போது, குட்டி ஸ்ருதிக்கு ரொம்பவே சங்கடமா இருக்குமாம். "எனக்கும் ஒரு பேர் இருக்கு, நான் ஸ்ருதி"னு கத்தணும் போல தோணுமாம். 

இப்படி அப்பாவோட பேர்ல இருந்து தப்பிக்க, ஸ்ருதி ஒரு ஐடியா பண்ணியிருக்காங்க. ஸ்கூல்லயோ இல்ல வெளியிலயோ யாராவது, "நீ கமல் ஹாசன் பொண்ணா?"னு கேட்டா, "ஐயையோ இல்லவே இல்ல, என் பேரு பூஜா ராமச்சந்திரன், என் அப்பா வைத்தியர் ராமச்சந்திரன்"னு ரொம்ப கான்ஃபிடன்டா பொய் சொல்வாங்களாம். 

இதுல ட்விஸ்ட் என்னன்னா, இந்த ராமச்சந்திரன் வேற யாரும் இல்ல, ஸ்ருதியோட பல் வலிக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த டென்டிஸ்ட்! பாவம், அந்த வைத்தியருக்கு தான் ஸ்ருதி ஹாசனுக்கு அப்பாவா புரொமோஷன் வாங்குன விஷயமே தெரிஞ்சிருக்காது. தனக்குனு ஒரு அடையாளத்தை உருவாக்க ஸ்ருதி பட்ட இந்த பாடு, இப்போ கேட்க காமெடியா இருந்தாலும், அப்போ அது அவங்களோட சுயமரியாதை சம்பந்தப்பட்ட விஷயமா இருந்துருக்கு. 

சென்னையோட மூலை முடுக்குல எல்லாம் அப்பா கமல் போஸ்டர்தான். அங்க ஸ்ருதியால சுதந்திரமா இருக்கவே முடியல. சாரிகாவும் கமல் ஹாசனும் பிரிஞ்ச சமயத்துல, ஸ்ருதி மும்பைக்கு ஷிஃப்ட் ஆனாங்க. "அங்கயாவது என்ன யாரும் கமல் பொண்ணுனு சொல்லி அடிக்கடி தொந்தரவு பண்ண மாட்டாங்க"னு நினைச்சுதான் போனாங்க. இப்படி கடினமா உழைச்சுதான், இன்னைக்கு சினிமாவுல தனக்கென ஒரு தனி இடத்தை பிடிச்சிருக்காங்க. 

அன்னைக்கு அப்பாவோட பேர்ல இருந்து ஓடி ஒளிஞ்ச ஸ்ருதி, இன்னைக்கு ரொம்பவே மாறியிருக்காங்க. "இப்போ கமல் ஹாசன் பெயர் இல்லாத ஒரு ஸ்ருதியை என்னால கற்பனை செஞ்சு கூட பார்க்க முடியாது"னு சொல்லி, அப்பா மேல இருக்குற மரியாதையை வெளிப்படுத்தியிருக்காங்க. 

கமல் ஹாசன் மற்றும் நடிகை சாரிகாவோட அந்த பிடிவாத குணம் தான் பிள்ளைகளுக்கும் வந்திருக்கும் போல. அதனாலதான், எந்த பின்புல உதவியும் இல்லாம, ஸ்ருதி ஹாசன் இன்னைக்கு தனியாளா ஒரு 'ஹேண்ட்சம்' கெரியரை உருவாக்கியிருக்காங்க, மொத்தத்துல, அப்பாவோட புகழில் இருந்து தப்பிக்க 'பூஜா ராமச்சந்திரன்' ஆன ஸ்ருதி, இன்னைக்கு இந்தியா பெருமைப்படும் ஸ்டார் நடிகையா வளர்ந்து நிக்கிறாங்க.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara