May 22, 2026 - 09:26 AM -
0
களனி கங்கை பள்ளத்தாக்கின் சில பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அவிசாவளையிலிருந்து ஹங்வெல்ல வரையான சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, கொழும்பு - அவிசாவளை பிரதான வீதியின் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக 'அத தெரண' செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
புவக்பிட்டிய தும்மோதர சந்தி, சீதாவக்க தாவரவியல் பூங்கா மற்றும் எட்டியாந்தோட்டை பகுதியின் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.
இதேவேளை, பலுமஹர - கடுவெல புதிய கண்டி வீதி உடுப்பில பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதன் காரணமாக அவ்வீதியூடான இலகுரக வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

