Header Logo

செய்திகள்
தெஹியோவிட்ட கல்வி வலயத்தின் 6 பாடசாலைகள் மூடல்

May 22, 2026 - 10:47 AM -

0

தெஹியோவிட்ட கல்வி வலயத்தின் 6 பாடசாலைகள் மூடல்

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட 6 பாடசாலைகளை இன்றைய தினம் (22) மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ருவன்வெல்ல பகுதியில் 3 பாடசாலைகளையும், தெஹியோவிட்ட பகுதியில் 3 பாடசாலைகளையும் மூடி, மாணவர்களை வீடுகளுக்கு அனுப்புமாறு வலயக் கல்விப் பணிப்பாளர் அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

தற்போதுள்ள காலநிலை நிலவரத்தைக் கருத்திற்கொண்டு, ஏனைய பாடசாலைகளை நடத்துவதா அல்லது விடுமுறை வழங்குவதா என்பது குறித்து தீர்மானிக்கும் பொறுப்பு வலயத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெஹியோவிட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் எச்.எல். ஹரிஸ்சந்திர தெரிவித்தார். 

இதேவேளை, பலத்த மழை காரணமாக கேகாலை - அவிசாவளை வீதி தெஹியோவிட்ட பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக 'அத தெரண' செய்தியாளர் குறிப்பிட்டார்.

MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

title