May 22, 2026 - 02:58 PM -
0
தமிழக முதலமைச்சர் தளபதி விஜய், சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துவிட்ட நிலையிலும் அவரை மீண்டும் நடிக்க வர வேண்டும் என இயக்குநர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
தமிழ்நாடு முழுக்க இப்போ முதல்வர் விஜய் பற்றிய பேச்சு தான் அதிகம் உள்ளன. தளபதி தைரியமா எலெக்ஷன்ல ஜெயிச்சு முதலமைச்சர் ஆகிட்டாரு. இனிமே சினிமாவுக்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இனிமே நடிக்க மாட்டேன்னு அவரே சொல்லிட்டாரு. ஆனா, இதையெல்லாம் தாண்டி, தமிழ் சினிமாவின் டாப் டைரக்டர்கள் எல்லாரும் விஜய்யை சந்திச்சிருக்காங்க. இந்த சந்திப்புக்குப் பின்னாடி ஒரு பெரிய ரகசியம் இருக்கு.,
ஆயிரக்கணக்கான கோடி வசூல் பண்ற ஒரு பெரிய ஹீரோ, சினிமாவை விட்டுப் போனா எப்படி இருக்கும்? அந்த ஹீரோவை நம்பி இருக்கிற எத்தனையோ குடும்பங்கள் பாதிக்கப்படும். ஏன்னா, அந்த ஹீரோவை வெச்சுப் படம் எடுக்க தயாரிப்பாளர்கள் இருக்க மாட்டாங்க. சினிமா இல்லைன்னா, சினிமா தொழிலாளர்களுக்கு வேலையும் இருக்காது. இப்போ இதே நிலைமைதான் தமிழ் சினிமாவுலயும் இருக்கு. இதுக்கு முக்கிய காரணம், தளபதி விஜய்.
ஆமாம், நடிகர் விஜய் சினிமாவுக்கு குட்-பை சொன்னதுக்கு அப்புறம், சினிமா துறையில் பல வேலைகள் அப்படியே நின்னு போச்சு. வருஷத்துக்கு ரெண்டு படம் நடிச்சிட்டு இருந்த விஜய் மேல முதலீடு செய்ய தயாரிப்பாளர்கள் இன்னைக்கும் தயாராத்தான் இருக்காங்க. ஆனா, தளபதிதான் 'எனக்கு சினிமாவே வேண்டாம்'னு சொல்லிட்டாரு. இதனால, விஜய்யை மட்டுமே நம்பி இருந்த சில தொழிலாளர் குடும்பங்களுக்கு வேலை இல்லாத சூழல் உருவாகியிருக்கு.
நடிகர் விஜய் ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிட்டு இருந்த ஹீரோ. ஆனா, 'ஜனநாயகன்' தான் என் கடைசிப் படம், நான் இனி முழு நேர அரசியல்வாதின்னு விஜய் அறிவிச்சதும், அவரை நம்பி கதை ரெடி பண்ணி வெச்சிருந்த டைரக்டர்களும், முதலீடு செய்யத் தயாராக இருந்த தயாரிப்பாளர்களும் அதிர்ச்சி ஆகிட்டாங்க. ஏன்னா, இப்படி ஒரு அற்புதமான ஹீரோவை சினிமா இழக்கப் போகுதேங்கிற கவலை அவங்களுக்கு. ஆனா, விஜய் இப்போ முதலமைச்சர். தமிழ்நாட்டை ஆள வேண்டிய பொறுப்புல இருக்காரு. இருந்தாலும், தளபதிக்கு ஒரு பெரிய கோரிக்கை வந்திருக்கு. அது, விஜய் மீண்டும் சினிமாவுக்கு வரணும்ங்கிற கோரிக்கைதான்.
விஜய் முதலமைச்சர் ஆனதை கொண்டாடிய தமிழ் இயக்குநர்கள் சங்கம், அவரை நேரில் சந்திச்சு வாழ்த்து தெரிவிச்சிருக்காங்க. அப்போ, 'நீங்க சினிமாவை விட்டு விலக வேண்டாம், தொடர்ந்து நடிக்கணும்'னு அந்த டைரக்டர்கள் எல்லாம் விஜய் கிட்ட கேட்டுகிட்டதா சொல்லப்படுது. ஆனா, இதுக்கு விஜய் சம்மதம் சொல்லலைன்னும் ஒரு பேச்சு இருக்கு.
போன வாரம், முதலமைச்சர் விஜய்யை சந்திச்ச நடிகர் கமல்ஹாசன், தமிழ் சினிமா துறையின் வளர்ச்சிக்காக 6 கோரிக்கைகள் அடங்கிய ஒரு பட்டியலைக் கொடுத்திருந்தார். அதுல, தமிழக அரசு சார்பா ஒரு ஓடிடி தளம் கொண்டு வரணும், உள்ளூர் படங்களுக்கு கேளிக்கை வரி ரத்து செய்யணும், அப்புறம் ஒரு வலுவான பைரசி தடுப்புக் குழுவை உருவாக்கணும்னு சில முக்கியமான விஷயங்கள் இருந்துச்சு. ஆனா இப்போ, ஒட்டுமொத்த இயக்குநர்கள் சங்கமே விஜய்யை மீண்டும் நடிக்கக் கூப்பிடுறதா சொல்றாங்க.
உண்மையைப் பார்த்தா, தமிழ்நாட்டுல பெரிய ஸ்டார் நடிகர்களுக்குப் பஞ்சமே இல்லை. ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், அஜித், கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால், விஜய் சேதுபதி, சூர்யா, சியான் விக்ரம்னு ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு. ஆனா, விஜய்யோட இடத்தை நிரப்பக் கூடிய நடிகர் யாருங்கிறதுதான் இப்போ இருக்கிற குழப்பம். அதனால, இந்தக் குழப்பமே வேண்டாம், விஜய்யே மீண்டும் நடிக்கட்டும்னு பலரும் ஆசைப்படறாங்க. ஆனா, மாநிலத்தோட முதலமைச்சரா இருக்கிற விஜய் இதுக்கு சம்மதிப்பாராங்கிறதுதான் இப்போ இருக்கிற பெரிய கேள்வி.

