Header Logo
Mogo Academy

சினிமா
அடுத்த மாதம் விஜய் ரசிகர்களுக்கு இரட்டிப்பு கொண்டாட்டம்!

May 25, 2026 - 10:04 AM -

0

அடுத்த மாதம் விஜய் ரசிகர்களுக்கு இரட்டிப்பு கொண்டாட்டம்!
Mobitel inner

எச்.வினோத் இயக்கத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ஜனநாயகன்’. கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வர இருந்த இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் படம் திரைக்கு வருவதில் இழுபறி நீடித்து வருகிறது. இது ஒருபுறமிருக்க ‘ஜனநாயகன்’ படம் ஆன்லைனில் கசிந்ததால் மேலும் படத்திற்கு சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதனிடையே, விஜய் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. 

‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே.நாராயணா கடந்த 23 ஆம் திகதி திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து அவர் அளித்த பேட்டியில், ‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வருவதற்காக காத்திருக்கிறோம். 

விரைவில் கிடைத்து விடும் என நம்புகிறோம். எவ்வளவு சீக்கிரம் படத்தை வெளியிட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ‘ஜனநாயகன்’ படத்தை வெளியிடுவோம் என்று கூறினார். 

இந்த நிலையில், தற்போது ‘ஜனநாயகன்’ படம் குறித்த தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் டிரெண்டிங்கில் ‘ஜனநாயகன்’ முதலிடத்தில் உள்ளது. அதாவது ‘ஜனநாயகன்’ படம் ஜூன் மாதம் 19 ஆம் திகதி வெளியாகிறது என்ற தகவலே சமூக வலைத்தளங்களில் உலாவருகிறது. விஜய் பிறந்தநாளையொட்டி ஜூன் மாதத்தில் ‘ஜனநாயகன்’ வெளியிடப்படலாம் என்றே கூறப்படுகிறது. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கும். ஜூன் 19 ஆம் திகதி ‘ஜனநாயகன்’ வெளியீடு, ஜூன் 22 ஆம் திகதி விஜய் பிறந்தநாள் என இரு கொண்டாட்டங்கள் கொண்டாடப்பட உள்ளது. 

முன்னதாக, ‘ஜனநாயகன்’ படம் வெளியீட்டு திகதி குறித்த பல்வேறு யூகங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் தற்போது உலா வரும் தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara