Header Logo
Mogo Academy

சினிமா
மீண்டும் படங்களில் நடிக்க வரும் உதயநிதி ஸ்டாலின்!

May 25, 2026 - 11:46 AM -

0

மீண்டும் படங்களில் நடிக்க வரும் உதயநிதி ஸ்டாலின்!
Mobitel inner

விஜய்யின் குருவி மூலம் தயாரிப்பாளராக கோலிவுட் வந்த உதயநிதி ஸ்டாலின் சூர்யாவின் ஆதவன் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தவர், தொடர்ந்து 11 ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வந்தார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளியான மாமன்னன் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. 

அந்த படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டதுடன் இனி சினிமா தொடர்பாக என்னை அணுக வேண்டாம் என்று கூறிவிட்டு முழு நேரம் மக்கள் சேவை செய்ய கிளம்பிவிட்டார். 

துணை முதல்வராக இருந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது எதிர்கட்சி தலைவராக இருக்கிறார். அவர் துணை முதல்வராக இருந்தபோதே மீண்டும் படங்களில் நடிக்க வாங்க உதய்ணா என்று அவரின் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தார்கள். 

இந்நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார் உதய்ணா என்று தெரிவிக்கப்படுகிறது. 

திரும்ப நடிக்க வந்தாலும் அரசியல் கதை கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்திருக்கிறாராம். இருந்தாலும் இந்த தகவலை உதயநிதி ஸ்டாலின் தரப்பில் இருந்து இதுவரை உறுதி செய்யவில்லை. இருப்பினும் உதய்ணா திரும்ப வருகிறார் என்று அவரின் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். 

சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வராக இருந்து வரும் விஜய் மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் விஜய்ணா இல்லை மாறாக உதய்ணா சினிமாவுக்கு திரும்புகிறார் என்கிறார்கள். 

தமிழக முதல்வர் விஜய்யின் கடைசி படம் இன்னும் ரிலீஸாகாமல் இருக்கிறது. ஹெச். வினோத் இயக்கிய ஜனநாயகன் படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்று பதவியேற்பு விழாவுக்கு வந்த தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா தெரிவித்தார். முதல்வர் பதவியேற்பு விழா நடந்து இரண்டு வாரமாகிவிட்டது. இந்நிலையில் கோவிலுக்கு சென்ற வெங்கட் நாராயணாவை பார்த்தவர்கள் ஜனநாயகன் ரிலீஸ் திகதி குறித்து கேட்டார்கள். 

அதற்கு அவர் கூறியதாவது, நான் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தேன். இது படம் பற்றி பேசும் இடமில்லை. ஜனநாயகனுக்கு சென்சார் சான்று வர காத்திருக்கிறோம். எந்த நேரத்திலும் சான்றிதழ் கொடுக்கப்படலாம். சான்று கிடைத்ததும் ரிலீஸ் திகதியை அறிவிப்போம். உலகம் முழுக்க பிரமாண்டமாக ரிலீஸாகும் ஜனநாயகன் என்றார். 

பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி ரீமேக்கிற்கு ஏன் சென்சார் சான்றிதழ் கிடைக்க இவ்வளவு லேட்டாகிறது என்று தெரியவில்லையே. நடப்பதை எல்லாம் பார்த்தால் கேசரியை விஜய்ணாவுக்கு ஏற்ப அரசியல் கலந்து தயாரித்திருப்பார்கள் போன்று என்று சினிமா ரசிகர்கள் பேசி வருகிறார்கள். 

இதற்கிடையே தளபதி ரசிகர்கள் சிலருக்கு விஜய் பற்றி கவலையாக உள்ளது. படங்களில் நடித்தபோது சந்தோஷமாக சிரித்துக் கொண்டே இருந்த மனுஷன் என்னைக்கு முதல்வர் ஆனாரோ அதில் இருந்து ரொம்ப சீரியஸாகவே இருக்கிறார். அண்ணனை இப்படி பார்க்க கஷ்டமாக இருக்கிறது. தயவு செய்து யாரும் அவரை தொந்தரவு செய்யாதீர்கள் என்கிறார்கள்.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara