Header Logo
Mogo Academy

சினிமா
தமிழக முதல்வரே 'ஐ லவ் யூ'னு ஸ்டோரி போட்ட பிரபலம்!

May 25, 2026 - 12:58 PM -

0

தமிழக முதல்வரே 'ஐ லவ் யூ'னு ஸ்டோரி போட்ட பிரபலம்!
Mobitel inner

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு ஐ லவ் யூ என்று சொல்லி இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போட்ட கோலிவுட் பிரபலத்தை தளபதி ரசிகர்கள் பாராட்டியிருக்கிறார்கள். உங்களுக்கு அந்த உரிமை இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்கள். 

கோட் படத்தில் நடித்த விஜய்க்கு CM2026 என்கிற எண் கொண்ட காரை கொடுத்தார் வெங்கட் பிரபு. விஜய் கதாபாத்திரம் பயன்படுத்திய கார் நம்பர் தற்போது மிகவும் பிரபலம். அந்த நம்பர் பிளேட்டில் இருந்தது மாதிரியே 2026 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருப்பது வேறு யாரும் அல்ல ஜோசப் விஜய் தான். அதனாலேயே விஜய்யின் அரசியல் எதிர்காலத்தை சரியாக கணித்த மகான் வெங்கட் பிரபு என்று தளபதி ரசிகர்கள் பேசி வருகிறார்கள். அந்த ராசியான பிளேட்டையே விஜய்க்கு பரிசாகவும் கொடுத்துவிட்டார். 

இந்நிலையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களே ஐ லவ் யூ என்று இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போட்டு விஜய் மீதான தன் பாசத்தை வெளிப்படுத்தினார் வெங்கட் பிரபுவின் தம்பியும், நடிகருமான பிரேம்ஜி அமரன். தளபதிக்கு ஐ லவ் யூ சொல்லும் உரிமை உங்களுக்கு ரொம்பவே இருக்கிறது பிரேம்ஜி. அதனால் எத்தனை முறை வேண்டுமானாலும் லவ் யூ சொல்லிக்கோங்க என்று தெரிவித்துள்ளனர் விஜய் ரசிகர்கள். 

கோட் பட கார் காட்சி வீடியோ அண்மையில் வைரலானபோது விஜய் அருகில் இருப்பதே நான் தான் என்று தெரிவித்திருந்தார் பிரேம்ஜி அமரன். அது மட்டும் அல்ல அந்த கார் காட்சியை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அன்றே கணித்த எங்கண்ணா வெங்கட் பிரபு என்று கேப்ஷன் போட்டிருந்தார். 

மேலும் விஜய் விஷயத்தில் ஒன்றல்ல இரண்டல்ல பல விஷயங்களை என் அண்ணன் கணித்திருக்கிறார் என்று ட்வீட்டும் போட்டார் பிரேம்ஜி அமரன். கோட் படத்தில் விசில் பாட்டு வந்தபோது ரசிகர்கள் கடுப்பானார்கள். ஆனால் விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். அதன் பிறகு விசில் பாட்டை கொண்டாடினார்கள். தவெக கொடியில் மஞ்சள், சிவப்பு நிறம் இருப்பதை மட்ட த்ரிஷா கிருஷ்ணன் சேலை, வளையல் கலர் மூலம் கணித்தாராம் வெங்கட் பிரபு. கோட் சூட்டையும் கணித்திருக்கிறார். மேலும் போக்குவரத்துத் துறை அமைச்சரை முடிவு செய்ததும் கோட் படம் என்று வெங்கட் பிரபுவுக்கு ஏகப்பட்ட கிரெடிட் போயிருக்கிறது. 

வெங்கட் பிரபு கணித்த விஷயங்கள் பற்றிய போஸ்ட்ரை பார்த்த வாசுகி பாஸ்கரோ, ரொம்ப வருஷமா உனக்கு தங்கச்சியா இருக்கேன். கொஞ்சம் பார்த்து பண்ணலாமே ப்ரோ என்று கேட்க, சீக்கிரமே கல்யாணம் ஆக வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார். அவர் வாழ்த்திய நேரம் வாசுகி பாஸ்கருக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். 

ப்ரோ அப்படியே இந்த ஜனநாயகன் படத்திற்கு எப்பொழுது சென்சார் சான்று கிடைத்து ரிலீஸாகும் என்று கணித்து சொன்னால் சிறப்பாக இருக்கும் என்று வெங்கட் பிரபுவிடம் கேட்கிறார்கள் ரசிகர்கள். முதல்வராகும் முன்பு விஜய் நடித்த ஜனநாயகன் படம் 5 மாதங்களாக ரிலீஸாகாமல் இருக்கிறது. 

சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என்று காத்திருக்கிறோம் என மே 10 ஆம் திகதி அதாவது முதல்வர பதவியேற்பு நாளில் தெரிவித்த ஜனநாயகன் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா, நேற்றும் அதையே தான் கூறினார். இதையடுத்தே தீர்க்கதரிசி வெங்கட் பிரபு பக்கம் திரும்பிவிட்டார்கள் ரசிகர்கள். 

விஜய்யின் கடைசி படம் ஜூன் மாதமாவது ரிலீஸாகி தளபதி பிறந்தநாள் பரிசாக இருக்குமா என்கிற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara