Header Logo
Mogo Academy

சினிமா
அவசர அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட சீரியல் ஹீரோ!

May 25, 2026 - 05:25 PM -

0

அவசர அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட சீரியல் ஹீரோ!
Mobitel inner

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் தொடரின் நாயகன் நவீன், திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 

சின்னத்திரையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் “சின்ன மருமகள்” சீரியல், பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத இந்த தொடரில் ஸ்வேதா நாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், சின்ன மருமகள் சீரியலின் கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் நவீன் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

தகவலின்படி, சில நாட்களுக்கு முன்பு கடும் வெயிலில் ஆக்‌ஷன் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. நீண்ட நேரம் வெப்பமான சூழலில் நடித்ததால், நடிகர் நவீனின் உடல் வெப்பநிலை திடீரென அதிகரித்து, அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. 

படப்பிடிப்பை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற பிறகும் அவரின் உடல்நிலை சீராகாததால், உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலை அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 

அங்கு வைத்தியர்கள் பரிசோதனை செய்து, ஆக்ஸிஜன் உதவி வழங்கியதுடன், முழுமையான ஓய்வு அவசியம் என அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சீரியலின் முக்கியமான திருமணக் காட்சிகள் திட்டமிட்டபடி நடைபெற வேண்டியிருந்ததால், தயாரிப்பு குழு அவரை மீண்டும் படப்பிடிப்பிற்கு வருமாறு கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, வைத்தியசாலையில் இருந்து நேரடியாகவே நடிகர் நவீன் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara