Header Logo
SLIC
வணிகம்
இலங்கை தெற்காசியாவிலேயே முதல் முறையாக சூரிய சக்தியால் இயங்கும் பேக்கரி அடுப்பை அறிமுகப்படுத்தி, தூய்மையான எரிசக்தி பயன்பாட்டில் வரலாற்றுச் சாதனையை படை

May 26, 2026 - 11:05 AM

இலங்கை தெற்காசியாவிலேயே முதல் முறையாக சூரிய சக்தியால் இயங்கும் பேக்கரி அடுப்பை அறிமுகப்படுத்தி, தூய்மையான எரிசக்தி பயன்பாட்டில் வரலாற்றுச் சாதனையை படை
Mobitel Inner 1278
EDEX Inner

முன்கூட்டியே கணிக்க முடியாத காலநிலை சூழ்நிலைகளிலும் இடையறாத செயல்பாட்டை உறுதிசெய்யும் வகையில், சூரிய மற்றும் உயிர் வாயு சக்தி மூலங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட சோலார் ஹைபிரிட் பேக்கரி அடுப்பை அறிமுகப்படுத்தியதெற்காசியாவின் முதல் நாடாக இலங்கை திகழ்கிறது. 

மே 22 அன்று கொழும்பு சின்னமன் லேக்சைட் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வு, Incitare Sri Lanka மற்றும் Global Rethinking Finance Collaborative (GRFC) ஆகியவற்றால், ஜேர்மன் டெக் கிளிநொச்சியுடன் மூலோபாய ஒத்துழைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் துணைத் தலைவர் மாண்புமிகு திரு. ஒலிவியர் பிராஸ் மற்றும் GIZ இலங்கை பிரதிநிதி திரு. ஃபேபியோ ஜேர்மானோ ஆகியோர் கலந்துகொண்டனர். 

இந்த முன்முயற்சியானது, ஐரோப்பிய தூய்மையான தொழில்நுட்பத்தின் தெற்காசியாவின் முதல் செயல்படுத்தலாகும். இது பாசிச எரிபொருளை பயன்படுத்தும் பேக்கிங் முறைக்கு பதிலாக சூரிய மற்றும் உயிர் வாயு சக்தியால் இயங்கும் மாற்று முறைகளை அறிமுகப்படுத்துவதோடு, நிலையான வாழ்வாதாரங்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் பல நிலையான அபிவிருத்தி இலக்குகளையும் ஆதரிக்கிறது. 

Incitare International மற்றும் GRFC நிறுவனங்களின்ஸ்தாபகர் மற்றும் பிரதம செயற்பாட்டு அதிகாரியான திருமதி பெரிஸ் க்வின், தனது உறுதியான நம்பிக்கை மற்றும் இடையறாத முயற்சி மூலம் இந்த திட்டத்தை ஒரு துணிச்சலான சிந்தனையில் இருந்து இலங்கை மண்ணில் செயற்படுத்தப்படும் நிஜமாக மாற்றியவர் ஆவார். .அவர் இந்த நிகழ்வில் உற்சாகமான வரவேற்புரையாற்றினார். திருமதி க்வின் கூறியதாவது: “சமூகங்கள், பேக்கரிகள், சுற்றுச்சூழல் சுற்றுலா நிறுவனங்கள் மட்டுமல்லாது, பயிற்சி நிறுவனங்களுக்கும் பெரும் வாய்ப்புகளை வழங்கக்கூடிய ஹைபிரிட் சோலார் அடுப்பை அறிமுகப்படுத்த நாம் தயாராக உள்ளோம். இது கார்பன் தடயத்தை குறைப்பதோடு, இறக்குமதிச் சார்பை குறைக்கும் தயாரிப்புகளை உருவாக்கவும், மேலும் புதிய ஏற்றுமதி தொழில் துறையை உருவாக்கும் திறனையும் கொண்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.” 

இந்த திட்டத்தை ஆரம்பத்தில் இருந்து முன்னெடுத்துச் செல்ல முக்கிய பங்காற்றிய Incitare International இன் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளரான திருமதி செரில் ஆர்ன்ட், கூறியதாவது: “இன்று நாம் காண்பது, மாற்றத்துக்காக காத்திருக்க மறுத்து அதை உருவாக்கத் தீர்மானித்த சமூகங்கள், பங்காளர்கள் மற்றும் நிறுவனங்களின் பல ஆண்டுகால அமைதியான ஆனால் உறுதியான உழைப்பின் விளைவாகும். இலங்கை ஒரு புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டதோடு மட்டும் நிற்கவில்லை. நிலையான வாழ்வாதாரங்களும் தூய்மையான சக்தியும் நாளைய கனவுகள் அல்ல என்பதை அது நிரூபித்துள்ளது. அவை இங்கேயே, இப்போதே நடைமுறையில் உள்ளன.” 

இந்த முன்முயற்சி 2025 மார்ச் மாதத்தில் முக்கிய அரசாங்க நிறுவனங்களின் தலைமையிலும் பங்கேற்பிலும் நடைபெற்ற தேசிய பங்குதாரர் கலந்துரையாடலுடன் தொடங்கப்பட்டது. அந்த கலந்துரையாடல்கள், சூரிய சக்தி அடுப்புகளை நன்கொடையாக வழங்குதல், குறைந்த செலவில் உள்ளூரில் தயாரிக்கப்படும் சூரிய அடுப்பை உருவாக்குதல், மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை மையப்படுத்திய மூன்று முக்கிய பங்குடைமைகளுக்கு வழிவகுத்தன. 

இந்த பயணமானது 2025 மார்ச் மாதம் தொடங்கியது, அப்போது Incitare நிறுவனம் கொழும்பில் உள்ள தேசிய இளைஞர் படையணியின் (NYC) தலைமை அலுவலகத்தில் தேசிய அளவிலான பங்குதாரர் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்தது. இதில் தேசிய இளைஞர் படையணி, ஏற்றுமதி அபிவிருத்தி சபை, சமுர்த்தி திணைக்களம், தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனம் மற்றும் பல அரசாங்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

இந்த முயற்சியின் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் உள்ளூர் புதுமை பரிமாணங்களில் தனது நிறுவனம் மையப்பங்காற்றியுள்ளதாகக் கூறிய GIZ Srilanka பிரதிநிதி திரு. ஃபேபியோ ஜேர்மானோ, இந்த முக்கிய கட்டத்தைப் பற்றி கருத்து தெரிவிக்கையில்: “Incitare International, GIZ Srilanka மற்றும் கிளிநொச்சியில் உள்ள இலங்கை-ஜே ர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (SLGTTI) ஆகியவற்றுடன் இந்த கூட்டாண்மையின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. அழைப்பிற்கு திருமதி பெரிஸ் மற்றும் திருமதி செரில் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். பல மாதங்களான முயற்சிகளுக்கும், கிளிநொச்சியிலிருந்து நீண்ட பயணத்திற்குப் பிறகும் இன்று இங்கு தயாராகியுள்ள இறுதி தயாரிப்பைப் பார்ப்பது உண்மையிலேயே பெரும் திருப்தியை அளிக்கிறது.” 

இதனைத் தொடர்ந்து, மாண்புமிகு திரு. பிராஸ் இலங்கையின் சக்தி விநியோகத்தை பாதிக்கும் மூன்று இணைந்த சவால்களை விளக்கினார். முதலாவது, மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண நிலைமைகளால் ஏற்பட்ட விநியோக தடைகள் ஆகும். இதன் விளைவாக, கடந்த சில மாதங்களில் மூன்று முறை எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன. மேலும், நாட்டின் இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சேமிப்பு திறன் இந்த சவாலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இரண்டாவது, குறைந்த தரமான நிலக்கரியின் இறக்குமதி மின்உற்பத்தியின் நம்பகத்தன்மையை பாதித்துள்ளது. மூன்றாவது, கடந்த சில மாதங்களாக போதிய மழைவீழ்ச்சி இல்லாததால் நீர்மின் உற்பத்தி குறைந்ததுடன், ஏற்கனவே அழுத்தத்திற்குள்ளான சேமிப்பு நிலையும் மேலும் சிக்கலடைந்துள்ளது. 

Incitare International என்பது சுவிட்சர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் பதிவு செய்யப்பட்ட, ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்ட ஒத்துழைப்பு தளமாகும். உலகளாவிய அபிவிருத்தி , மனிதாபிமான அமைப்புகள் மற்றும் அரசாங்க -தனியார்பங்குடைமைகளில் எதிர்கால சிந்தனையையும் மதிப்புவழி ஒத்துழைப்பையும் கொண்டு வருவதற்காக திருமதி பெரிஸ் க்வின் இதை நிறுவினார். இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள தொழில்முறை பயிற்சி நிறுவனமான ஜேர்மன் டெக் கிளிநொச்சியும், ஜேர்மன் அபிவிருத்தி நிறுவனமான GIZ srilankaவும் , இந்த முக்கிய முன்னேற்றத்தை சாத்தியமாக்கிய முக்கிய செயல்படுத்தும் பங்காளர்களாக இருந்தன.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278