Header Logo
SLIC
வணிகம்
Sun Siyam Pasikudah கடலோர தூய்மைப்படுத்தலுக்காக சமூகத்தை ஒன்று சேர்க்கிறது

May 26, 2026 - 11:11 AM

Sun Siyam Pasikudah கடலோர தூய்மைப்படுத்தலுக்காக சமூகத்தை ஒன்று சேர்க்கிறது
Mobitel Inner 1278
EDEX Inner

இந்த வளைகுடா நம் அனைவருக்குமானது: பாசிக்குடா கடற்கரையில் சமூக சுத்தப்படுத்தும் முயற்சிக்கு தலைமை தாங்கிய Sun Siyam Pasikudah இலங்கையில் உள்ள ஐந்து நட்சத்திர சொகுசு விடுதியான Sun Siyam Pasikudah, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில், 2026 மே 08 அன்று பாசிக்குடா கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்வை நடத்தியது. எமது மக்கள், இயற்கை மற்றும் கலாசாரத்தை பேணுகிறோம் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, Sun Siyam Cares திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாடசாலை மாணவர்கள், விடுதி ஊழியர்கள் மற்றும் அங்கு தங்கியிருந்த விருந்தினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சுற்றுச்சூழல் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். 

இந்த முயற்சியானது வழக்கமான தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளைப் போலன்றி, கல்வியை அதன் மையமாகக் கொண்டிருந்தது. ஒரு உள்ளூர் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள், கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகள், கடல்சார் குப்பைகள் பல்லுயிரியத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் இலங்கையின் கடற்கரையைப் பாதுகாப்பதில் ஒவ்வொரு தனிமனிதனும் ஆற்றும் பங்கு குறித்த வழிகாட்டப்பட்ட அமர்வுகளில் இணைந்தனர். இது, சுற்றியுள்ள சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இந்த வளைகுடா சுற்றுச்சூழல், கலாசாரம் மற்றும் பொருளாதாரம் ஆகிய அம்சங்களில் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் பற்றிய நேரடிப் புரிதலை வழங்கியது. Sun Siyam Pasikudah இன் பொதுமுகாமையாளரான அர்ஷெட் ரிஃபாய் தெரிவிக்கையில் இந்த கடற்கரை தூய்மைப்படுத்துதலை மற்றையவற்றிலிருந்து வித்தியாசப்படுத்துவது, இதை நாம் யாருடன் இணைந்து செய்தோம் என்பதுதான். இந்த விரிகுடா ஏன் பாதுகாக்கப்படத் தகுதியானது, இதன் சுற்றுச்சூழல் மற்றும் அழகு, இங்கு வாழும் குடும்பங்களுக்கு இதன் முக்கியத்துவம் ஆகியவற்றை ஒரு குழந்தை புரிந்துகொள்ளும்போது, ​​அந்த அறிவு அவர்களுடனேயே நிலைத்திருக்கும். அதுவே நாம் செய்யக்கூடிய மிகச்சிறந்த நிலையான முதலீடாகும். 

பாசிக்குடா வளைகுடாவின் ஆழமற்ற, படிகம்போல தெளிவான மரகதப் பச்சை நிற நீர் மற்றும் கிழக்கு மாகாணத்தின் செழுமையான கடல் மற்றும் கலாசார பாரம்பரியம்—நூற்றாண்டுகள் பழமையான மசூதிகள், கோவில்கள் முதல் காத்தான்குடியின் சுறுசுறுப்பு வரை—இவை அனைத்தும் இந்தக் கடற்கரையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன. ரிசார்ட்டின் கழிவில்லா முகாமைத்துவ கொள்கைகளுக்கு இணங்க, பங்கேற்பாளர்கள் கடற்கரை முழுவதும் பரவி குப்பைகளைச் சேகரித்து தரம் பிரித்தனர். அதேவேளை, பார்வையாளர்கள் இந்தச் செயல்பாடு தங்களுக்கு ஒரு வழக்கமான தங்குமிட அனுபவத்தைத் தாண்டி, அந்த இடத்துடனான (பூமி மற்றும் கலாசாரத்துடனான) தொடர்பை மேலும் ஆழமாக்கியதாகத் தெரிவித்தனர். சக்தி, நீர், வனவிலங்கு மற்றும் சமூக நலன் சார்ந்த 147 கடுமையான விதிமுறைகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்ததற்காக இந்த ரிசார்ட்டுக்கு உயரிய தங்க சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த ரிசார்ட்டின் சொந்தப் பண்ணையில் 38-க்கும் மேற்பட்ட வகையான பழங்கள், காய்கறிகள் மற்றும் மூலிகைகள் இயற்கையான முறையில் வளர்க்கப்படுகின்றன. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில், சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் கருவிகள் இங்கு பயன்படுத்தப்படுகின்றன.ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, உள்ளூர் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. Sun Siyam Cares நிதியத்தின் மூலம் கேர்பண்ட் யானைகள் பாதுகாப்பு அமைப்புக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது. இதையொட்டி, உடவலவை யானைகள் மறுவாழ்வு மையத்தில் இருக்கும் கலோ என்ற இளம் யானைக்குத் தேவையான பராமரிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த யானை 2029-ஆம் ஆண்டு மீண்டும் காட்டுக்குள் விடப்படவுள்ளது. 

GO TRAVEL 2025 இல் ஆண்டின் மிகச் செல்வாக்குமிக்க நிலையான ஹோட்டல் குழுமம் எனப் பெயரிடப்பட்ட Sun Siyam Resorts இன் ஒரு பகுதியாக, கிழக்குக் கடற்கரையில் சுற்றுலா என்பது வளங்களை குறைக்கும் சக்தியாக இல்லாமல், புதுப்பிக்கும் சக்தியாக இருப்பதை உறுதி செய்வதில் இத்தகைய முன்னெடுப்புகள் தொடர்ச்சியான, ஆண்டு முழுவதுமான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278