May 29, 2026 - 04:11 PM
By மட்டக்களப்பு நிருபர் சரவணன்
By மட்டக்களப்பு நிருபர் சரவணன்
மட்டக்களப்பு - கரடியனாறு பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்புத் துப்பாக்கி ஒன்றினை நேற்று (28) இரவு 8.00 மணியளவில் மீட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் அவசர உதவிச் சேவையான 119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் தும்பாஞ்சோலை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த உள்ளூர் தயாரிப்புத் துப்பாக்கியைக் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

































