Header Logo

செய்திகள்
சத்தர பதிப்பக ஸ்தாபகர் காலமானார்

May 31, 2026 - 04:53 PM -

0

சத்தர பதிப்பக ஸ்தாபகர் காலமானார்

சத்தர குழுமச் சேவையின் நிறுவனரும், 'சத்தர' முதன்மை ஆசிரியருமான கே.டி. சந்திரசோம பெரேரா தமது 82 ஆவது வயதில் நேற்று (30) காலமானார். 

அன்னாரது உடல், இல. 8/2, மெல்டர் பிளேஸ், நுகேகொடையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

அவரது இறுதிச் சடங்குகள் ஜூன் மாதம் 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு பொரளை பொது மயானத்தில் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மறைந்த சந்திரசோம பெரேரா இலங்கையின் கல்வித்துறையில், குறிப்பாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கணித பாடம் தொடர்பாக மிகவும் பிரபலமான ஒரு மூத்த ஆசிரியரும், எழுத்தாளரும் ஆவார். 

அவர் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் (SLEAS) முன்னாள் அதிகாரியுமாவார். 

கலைப் பட்டதாரியான இவர், கல்வித்துறையிலான டிப்ளோமாவையும் கணித பாடத்திற்கான விசேட பயிற்சியையும் பெற்றவர். 

'சத்தர' பதிப்பகம் என்பது இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்காக மேலதிகப் புத்தகங்கள், வினாத்தாள்கள் மற்றும் பயிற்சிப் புத்தகங்களை அச்சிட்டு விநியோகிக்கும் ஒரு முன்னணி கல்விப் பதிப்பக நிறுவனமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title