Header Logo

செய்திகள்
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு எப்போது வௌியாகும்?

May 25, 2026 - 12:22 PM -

0

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு எப்போது வௌியாகும்?

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

பரீட்சை முடிவுகள் மிக விரைவில் வெளியாகவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் குறித்து "அத தெரண" எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே, பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் திகதியை தற்போதைக்கு அறிவிக்க முடியாது என்று கூறினார். 

எவ்வாறாயினும், ஜூன் மாத நடுப்பகுதியில் சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெற்றதுடன், இதற்காக 4,51,463 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். 

அவர்களில் 3,82,249 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் எனவும், 69,214 பேர் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் எனவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

MOST READ

காணொளி
வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை

வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

title