May 22, 2026 - 02:40 PM -
0
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டு, வாகன உரிமையாளர்களால் இதுவரை பெற்றுக்கொள்ளப்படாத வாகன இலக்கத் தகடுகளை ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் விரைவாகப் பெற்றுக்கொள்ளுமாறு மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த ஆண்டுகளில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் அச்சிடப்பட்ட நிலையில், இதுவரை வாகன உரிமையாளர்களால் பெற்றுக் கொள்ளப்படாத சுமார் ஒரு இலட்சம் வாகன இலக்கத் தகடுகள் திணைக்கள வளாகங்களில் தேங்கியுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு மாவட்டம் சார்பாக நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திலும், நாடளாவிய ரீதியில் உள்ள ஏனைய மாவட்ட அலுவலகங்களிலும் வாகன இலக்கத் தகடுகள் குவிந்துள்ளன.
எனவே 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் வாகன இலக்கத் தகடுகளுக்கு விண்ணப்பித்து, அவற்றை இதுவரை பெற்றுக்கொள்ளாத அனைத்து வாகன உரிமையாளர்களும் ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக தகவல்களை பெற வேண்டுமாயின் 011-2033333 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக திணைக்களத்தைத் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

