May 31, 2026 - 07:55 PM -
0
தெரண ஊடக வலையமைப்பினால் 24 மணி நேரம் தடையின்றி நடாத்தப்பட்ட 'இலங்கையின் மிகப்பெரிய வெசாக் தன்சல்'சற்று முன்னர் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இன்று (31) இரவு 7.30 மணியளவில் தன்சல் வழங்கல் பணி அனைத்து நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தெரணவினால் மூன்றாவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தன்சல் நிகழ்வு, கொழும்பு 7 இல் உள்ள சுதந்திர சதுக்க வளாகத்தில் நேற்று (30) பிற்பகல் 7 மணியளவில் ஆரம்பமானது.
தெரண ஊடக வலையமைப்பின் நிறுவனர் திலித் ஜயவீரவின் தலைமையில் இது ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கையின் தொழில்முறை சமையற்கலைஞர்கள் சங்கம் மற்றும் கொழும்பு மாநகரசபை ஆகியவற்றுடன் இணைந்தே தெரண ஊடக வலையமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது.
நேற்று (30) மற்றும் இன்று (31) ஆகிய இரு தினங்களிலும் 40,000 க்கும் அதிகமான பொதுமக்கள் இந்த தன்சல் நிகழ்வில் பங்கேற்று பயனடைந்தமை குறிப்பிடத்தக்கது.

