May 31, 2026 - 09:48 PM -
0
19வது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (31) இடம்பெறுகின்றது.
இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு ஆகிய அணிகள் மோதுகின்றன.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் துடுப்பாடியது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
குஜராத் அணி சார்பில் வொஷிங்டன் சுந்தர் அதிகபட்சமாக 50 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
இந்நிலையில் 156 என்ற வெற்றியிலக்கை நோக்கி ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு துடுப்பாடி வருகின்றது.

