Header Logo

செய்திகள்
இரண்டாவது தடவையாகவும் சேம்பியனாகிய RCB

May 31, 2026 - 11:34 PM -

0

இரண்டாவது தடவையாகவும் சேம்பியனாகிய RCB

19வது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரிலும் சேம்பியனாகி தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. 

தொடரில் இன்று (31) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு ஆகிய அணிகள் மோதியிருந்தன. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் துடுப்பாடியது. 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து குஜராத் அணி 155 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. 

குஜராத் அணி சார்பில் வொஷிங்டன் சுந்தர் அதிகபட்சமாக 50 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். 

இந்நிலையில் 156 என்ற இலக்கு வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு 18 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து போட்டியில் வெற்றி பெற்றது. 

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு அணி சார்பில் துடுப்பாட்டத்தில் விராட் கோலி ஆட்டமிழக்காது 75 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்து அணியின் வெற்றிக்கு பங்காற்றினார். 

கடந்த வருடமும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு அணி கிண்ணத்தை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title