Header Logo

வடக்கு
பொலிஸார் துரத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் படுகாயம்!

Jun 1, 2026 - 11:15 AM -

0

பொலிஸார் துரத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் படுகாயம்!

யாழில் போக்குவரத்து பொலிஸார் நேற்று (31) துரத்தி வந்த மோட்டார் சைக்கிள் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

இது குறித்து மேலும் தெரியவருகையில், 

நேற்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸார் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை துரத்தி வந்தனர். இதன்போது யாழ்ப்பாணம் குருநகர் மவுண்ட் ஹாமல் சந்தியடியில், பொலிஸார் துரத்தி வந்த மோட்டார் சைக்கிளானது வேறொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இதன்போது மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளார். பின்னர் துரத்தி வந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

காயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக யாழ்ப்பாணம் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

--

MOST READ

காணொளி
காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

title