Header Logo

இந்தியா
பா.ஜ.க.வில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை?

Jun 1, 2026 - 11:32 AM -

0

பா.ஜ.க.வில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை?

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்து மீண்டும் இணைவு, எம்.எல்.ஏ.க்கள் இராஜினாமா என பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. 

இதனிடையே, தமிழக பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய கட்சி குறித்த அறிவிப்பை அண்ணாமலை தனது பிறந்தநாளான வருகிற 4 ஆம் திகதி அறிவிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும், தனது முடிவு குறித்து அறிவிக்க பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபினை சந்திக்க இன்று (01) அல்லது நாளை (02) டெல்லி செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது தொடர்பான தகவல்கள் சட்டசபை தேர்தலுக்கு முன்பே பரவி வந்தன. அதனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் கட்சிப் பெயர்கள், கொடி வடிவமைப்பு குறித்து ஆலோசனை வழங்கி வந்தனர். இதனிடையே ஜூன் மாத தொடக்கத்திலேயே ஓர் அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டு வந்தது. 

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலை, 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது 37-வது வயதில் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். தமிழக பா.ஜ.க. வை வழிநடத்திய இளம் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். அதனை தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு அவர் அப்பதவியில் நீடித்தார்.

MOST READ

காணொளி
காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

title