Header Logo

வணிகம்
இலங்கையின் வங்கித்துறை நிலையானதாகவும், மோசடி சம்பவங்களை எதிர்கொள்ளத்தயாராக இருப்பதாகவும் உறுதியளிக்கிறது

Jun 1, 2026 - 11:40 AM -

0

இலங்கையின் வங்கித்துறை நிலையானதாகவும், மோசடி சம்பவங்களை எதிர்கொள்ளத்தயாராக இருப்பதாகவும் உறுதியளிக்கிறது

இலங்கையின் வங்கி துறையானது அண்மையில் சில தனிப்பட்ட நிதி மோசடி சம்பவங்கள் நிகழ்ந்த போதிலும், துறை நிலைத்தன்மையுடனும், வலிமையுடனும், பாதுகாப்புடனும் செயல்பட்டு வருவதாக ஒருமித்த மற்றும் தெளிவான உறுதியை வழங்கியுள்ளது. மேலும், இந்த மோசடி சம்பவங்கள் வாடிக்கையாளர் வைப்புத் தொகைகளின் பாதுகாப்பிற்கோ அல்லது மொத்த நிதி முறைமையின் நம்பகத்தன்மைக்கோ எந்தவித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களிடையே சிலவிசனங்களை உருவாக்கியிருப்பதை ஏற்றுக்கொண்டிருந்தாலும், அவற்றை முழுமையாக கையாளுவதற்கும், இந்த சவால்களை திறம்பட சமாளித்து குறைப்பதற்கும் வங்கித் துறை முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை வங்கிகள் சங்கம் (SLBA) ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையின் மூலம் இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளது. 

நிதி மோசடி மற்றும் சைபர் தாக்குதல் சம்பவங்கள் பற்றிய சமீபத்திய செய்திகள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இந்தத் துறையின் அடிப்படை (நிதி) பலத்தையும், தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் ஒழுங்குமுறை கண்காணிப்பு மற்றும் இடர் முகாமைத்துவக் கட்டமைப்புகளின் செயல்திறனையும் சங்கம் மீண்டும் வலியுறுத்தியது. 

சமீபத்திய நிதி மோசடி மற்றும் சைபர் தாக்குதல் சம்பவங்கள் இயல்பாகவே பொதுமக்களின் கவனத்தை பெற்றுள்ளன. எனினும், வங்கி துறை தனது அடிப்படை வலிமையையும், நிலைத்தன்மையையும் தக்கவைத்துக் கொண்டு, வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகைகளின் பாதுகாப்பையோ அல்லது துறையின் மைய நிலைத்தன்மையையோ பாதிக்காமல் இத்தகைய சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டதாக உள்ளது என்று துறை தலைவர்களும் ஒழுங்குமுறை அமைப்புகளும் வலியுறுத்துகின்றன, என்று SLBA தலைவர் திரு. சனத் மனதுங்க தெரிவித்தார். 

சமூக ஊடகங்களில் வெளியாகும் பல பதிவுகள் தவறானவையோ அல்லது துல்லியமற்ற தகவல்களையோ கொண்டிருந்தாலும், சமீபத்தில் இடம்பெற்ற சில சம்பவங்கள், குறிப்பாக இலத்திரனியல் நிதி பரிமாற்ற மோசடிகள், டிஜிட்டல் பாதுகாப்பு குறித்து முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். எனினும், இச்சம்பவங்கள் வங்கிகள் பராமரித்து வரும் மிகப்பெரிய நிறுவன மூலதன பாதுகாப்பு நிதிகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த அளவிலானவை மட்டுமே ஆகும். முக்கியமாக, வாடிக்கையாளர்களின் நிதி பாதுகாப்பாக இருப்பதாக வைப்புதாரர்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது; இத்தகைய இழப்புகள் பொதுமக்களின் வைப்புத் தொகைகளிலிருந்து அல்லாமல், நிறுவனங்களின் மூலதன பாதுகாப்பு நிதிகளிலிருந்தே ஈடுசெய்யப்படுகின்றன. 

அண்மைய மாதங்களில் பதிவான பிற சைபர் குற்றச்சம்பவங்கள், குறிப்பாக மின்- தூண்டிலிடல் தொடர்பான மோசடிகள், நேரடியாக வங்கி துறையுடன் தொடர்புடையவை அல்லாததால், வங்கி முறைமையில் உள்ள பலவீனங்களை வெளிப்படுத்துவதில்லை. இருப்பினும், உலகளாவிய நிதி முறைமைகள் எதிர்கொண்டு வரும் டிஜிட்டல் அச்சுறுத்தல்கள் தொடர்ந்து மாறிவரும் மற்றும் மேலும் நுட்பமானதாக உருவெடுத்து வருவதை அவை சுட்டிக்காட்டுகின்றன என்று தலைவர் தெரிவித்தார். ஆனால், இவை தனிப்பட்ட சம்பவங்கள் மட்டுமே என்றும், முழு வங்கி துறையிலும் முறைமை சார்ந்த பலவீனங்கள் உள்ளன என்பதைக் காட்டுவதில்லை என்றும் அவர் வலியுறுத்தினார். 

இந்த நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில், இலங்கை மத்திய வங்கி அனைத்து உரிமம் பெற்ற வங்கிகளும் குறைந்தபட்ச ஒழுங்குமுறை தேவைகளை விட அதிகமான மூலதன போதியத் தன்மையும் மற்றும் திரவத்தன்மை விகிதங்களையும் தொடர்ந்து பராமரித்து வருகின்றன என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. தேவையானபட்சத்தில் தற்காலிக திரவத்தன்மை ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் ஒழுங்குமுறை அமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் நிதி முறைமையின் இடையறாத நிலைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. 

இலங்கையின் வங்கி துறை கூட்டாக பல டிரில்லியன் ரூபாய் பெறுமதியிலான சொத்துகளை நிர்வகித்து வருகிறது. இவை பல்துறை முதலீட்டு தொகுப்புகள் மற்றும் வலுவான நிர்வாக கட்டமைப்புகளால் ஆதரிக்கப்படுகின்றன. இந்த பரந்தளவு மற்றும் விவேகமான இடர் முகாமைத்துவ நடைமுறைகள் இணைந்து, பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்திக்கொண்டே அதிர்ச்சிகளை சமாளிக்க வலுவான அடித்தளத்தை வழங்குகின்றன, என்று திரு. மனதுங்க தெரிவித்தார். 

அதேவேளை, உருவெடுத்து வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக தமது பாதுகாப்பு முறைமைகளை வங்கி துறை தீவிரமாக வலுப்படுத்தி வருகிறது. மேம்பட்ட மோசடி இடர் முகாமைத்துவ முறைமைகளில் முதலீடு செய்தல், மேலும் கடுமையான கண்காணிப்பு நடைமுறைகள், மற்றும் சுயாதீன நுண்ணறிவு தடயவியல் தணிக்கைகள் மூலம் வங்கிகள் தொடர்ந்து தங்களது இணைய பாதுகாப்பு கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகின்றன. மேலும், துறையெங்கும் நிர்வாகம், பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்று வரும் ஒழுங்குமுறை மற்றும் நாடாளுமன்ற முயற்சிகளும் இதற்கு துணைபுரிகின்றன. 

வாடிக்கையாளர் விழிப்புணர்வே மிக முக்கியமான பாதுகாப்பு அம்சமாக இருப்பதை உணர்ந்து, பாதுகாப்பான டிஜிட்டல் நடைமுறைகள் குறித்த பொதுமக்கள் கல்வி முயற்சிகளையும் வங்கிகள் மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. இதில் கடவுச்சொல் பாதுகாப்பு, ணமின் தூண்டிலிடல்ணு மோசடிகளைத் தடுப்பது, மற்றும் ஞசு குறியீடுகள் உள்ளிட்ட டிஜிட்டல் கட்டண கருவிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்கள் அடங்குகின்றன. 

SLBA தனது அறிக்கையின் பூர்த்தியில், இலங்கையின் வங்கிகள் தொடர்ந்து நிலைத்தன்மையின் தூண்களாக இருந்து, வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகைகளை பாதுகாத்து கொண்டு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தையும் ஆதரித்து வருகின்றன. வங்கித்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டிருக்கும்போதும், வாடிக்கையாளர்களும் தமது டிஜிட்டல் பயன்பாடுகளில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம், என்று தெரிவித்துள்ளது.


MOST READ

காணொளி
செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

title