Header Logo

இந்தியா
தமிழக முதலமைச்சர் திருச்சி வருகை!

Jun 1, 2026 - 03:31 PM -

0

தமிழக முதலமைச்சர் திருச்சி வருகை!

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த மாதம் 10 ஆம் திகதி தமிழ்நாட்டின் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய், தான் போட்டியிட்ட சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை இராஜினாமா செய்தார். 

இந்நிலையில் தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று (01) மாலை 2.30 மணி அளவில் தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்தடைந்தார். 

திருச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு அரசு சார்பிலும், பொலிஸார் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

திருச்சியில் பொலிஸாரின் மரியாதையையும் தமிழக முதலமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டார். 

திருச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜயக்கு மதிமுக எம்.பி.துரை வைகோ சால்வை அணிவித்து வரவேற்றார். 

அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ரமேஷ், துணை சபாநாயகர் உள்ளிட்டோர் முதலமைச்சர் விஜயை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 

வரவேற்பு முடிந்த பின்னர் முதலமைச்சர் தனது பிரத்யேக வாகனத்தின் மூலம் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரிக்கு செல்கிறார். 

செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் முதலமைச்சர் விஜய் பேச உள்ள இடத்தில் பொதுமக்கள் அமர்வதற்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. 

இந்த பந்தலின் முகப்பு பகுதியில் விஜய் தனது வாகனத்தில் இருந்தபடியே பேச இருக்கிறார்.

 


MOST READ

காணொளி
காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

title